இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பரங்கிப்பேட்டையில் ஒரு ஐ.ஏ.எஸ்.

E-mail அச்செடுக்க
பரங்கிப் பேட்டை திரு. ராதா கிருஷ்ணன் - திருமதி மருத்துவர் அங்கயற்கண்ணி இவர்களின் மகனான ஆனந்த் என்பவர் மாணவ சமுதாயம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய மாணவர்களில் ஒருவர் என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.


அண்ணா பல்கலைகழகத்தில் B.E. Geo Informatics & B.Tech (I.T) (Dual Degree) இந்த வருடம் முடித்து விட்டு I.A.S. இந்திய ஆட்சிப்பனிகளுக்கான அரசு குடிமைத்தேர்வு 2008 தேர்வினை எழுதினார்.


தேர்வில் வெற்றி பெற்று தரப்பட்டியலின் அடிப்படையில் I.R.S. (Indian Revenue Service)  இந்திய வருவாய் பணிக்கு தெரிவு செய்யப் பட்டுள்ளார்.
 
அரசு குடிமைத்தேர்வு என்பது (Civil Service Exams) இந்திய அரசின் ஆட்சிப் பணிக்கான உயர் அளவிலான தேர்வாகும். சூழ்திறன் அமையப்பெற்ற மற்றும் மிகுந்த பயிற்சியும், முயற்சியும் உள்ள மாணவர்கள் மட்டுமே இதனை எளிதாக வென்றெடுக்கலாம்.
 
I.A.S. க்காக முயற்சி செய்து தரப்பட்டியலில் சற்று குறைந்ததால் I.R.S. கிடைத்திருந்தும் ( I.R.S.சே ஒரு சாதனை தான் ) இவர் மீண்டும் I.A.S. க்காக (Reappear) இந்த வருடம் தேர்வு எழுதுகிறார்.
தனது இலட்சியத்தில் வெற்றி பெற்று சாதித்த, இனியும் சாதிக்கப்போகும் இவர், I.A.S. ஆக நமது வாழ்த்துக்கள்.

இவரைப் பற்றிய சில குறிப்புகள்:

*  பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு நாட்டின் மிக உயர் தர கல்வி மையமான I.I.T. யில் பயில நுழைவுத் தேர்வு எழுதினார். அதை பற்றி கேட்டால் " that was not a serious attempt " என்று மெலிதாக சிரிக்கிறார்.

* ஆனந்த் அவர்களின் தந்தை ஒய்வு பெற்ற வங்கி மேலதிகாரி. தற்போது பொது சேவையில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இவரின் தாயார் பரங்கிப்பேட்டை மக்கள் அனைவரும் அறிந்த மருத்துவர் அங்கயற்கன்னி அவர்கள். பரங்கிப்பேட்டையில், மருத்துவர் நூர் முகமது தவிர நடு இரவிலும் மக்களின் அவசர மருத்துவ உதவிக்காக தன்னலம் கருதாது சேவை புரிபவர்.

* இவரின் சகோதரர்கள் இருவர் அஷ்விந்த், அரவிந்த்.  ஒருவர் M.B.B.S இன்னொருவர் B.D.S. படித்து வருகின்றனர்.
 
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்.

 

 

நன்றி : http://mypno.blogspot.com/

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்