இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

PhD.,M.Phil.- முனைவர் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு!

E-mail அச்செடுக்க
இந்தியப் பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டம் பெறுவது இனி அவ்வளவு சுலபமல்ல. தொழில் நுட்ப பட்டப் படிப்புகளைப் போன்று முனைவர் பட்டம் பெறுவதற்கும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (University Granting Commission) பரிந்துரைத்துள்ளது.
 
முனைவர் பட்டத்திற்கான விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை நேர்முகக் கலந்தாய்வில் விவாதித்த பிறகு நுழைவுத் தேர்வெழுத வேண்டும். தேர்தெடுக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட பருவத்திற்கு வகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். இப்பருவ வகுப்பாய்வுக் காலத்தை, ஆய்வுக்குமுந்தைய படிப்பாகக் கருதி குறைந்தளவு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில மத்தியப் பல்கலைக் கழகங்கள் தனித்தனி அடிப்படைத்  தகுதிகளை வகுத்துள்ள போதிலும் நிகர்நிலை மற்றும் மாநிலப் பல்கலைக் கழகங்களில் இத்தகைய விதிமுறைகள் ஏதுமின்றி எவரும் PhD., MPhil., பட்டங்களைப் பெற்று முனைவராகலாம். முங்கேகார் கமிட்டியின் அறிக்கையின்படி குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கூட 2-3 வருடங்களில் முனைவர் பட்டம் பெறுவதாகச் சுட்டிக்காட்டி உள்ளது. ஆய்வை மேற்பார்வையிடம் வழிகாட்டி ஆய்வாளர்களேகூட மாணவர்களுக்கு ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
 
இப்புதிய நடைமுறைகள் மூலம் முனைவர் பட்டம்பெற விரும்பும் மாணவர்கள் ஆய்வுக்கட்டுரையை கட்டாயம் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சஞ்சிகையில் வெளியிடுவதோடு துறைசார் அலுவலகத்தில் சமர்ப்பித்து இளம்முனைவர் தகுதிபெற வேண்டும்.  சமர்பிக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள் இருநிபுனர்கள் குழுவால் மதிப்பிடப்படும். அவர்களில் ஒருவர் வெளிமாநிலத்தைச் சார்ந்த நிபுனராக இருப்பார். இறுதியில் வாய்வழித் தேர்வும் நடைபெறும்.
 
தேசிய தகுதித் தேர்வு National Eligibility Test மூலம் முனைவர்/விரிவுரையாளர் பட்டப்படிப்புக்கு இந்நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான விரிவுரையாளர் மற்றும் முனைவர் படிப்புக்கு நேர்முகத்தேர்வு கட்டாயம். மேலும், பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டப்படிப்புக்கான இருக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பிறமாநில மாணவர்களும் பயனுரும் வகையில் விளம்பரப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
ஒரு வழிகாட்டும் ஆய்வாளரின்கீழ் எட்டு இளநிலை (PhD.,) முனைவர்களும் ஐந்து மேல்நிலை (MPhil .,) முனவர்களும் மட்டுமே ஒரே பருவத்தில் இருக்க முடியும். ஆய்வுகளின் தனித்தன்மையை உறுதிபடுத்த ஆய்வுக் கட்டுரைகளின் உள்ளடகத்தை (CD) குறுந்தகடுகளில் பதிந்து சமர்பிக்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட முந்தைய ஆய்வுகளை கணினிமைப் (DIGITALIZE?) படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்