இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கொரியத் தீபகற்பத்தில் போர் மேகம்?

E-mail அச்செடுக்க

வடகொரியா தனது புளூட்டோனியம், யுரேனியம் கையிருப்பை அணுஆயுத உற்பத்திக்குப் பயன்படுத்தப் போவதாக அறிவித்ததை அடுத்து அமெரிக்கா அந்நாட்டிற்குக் கடும் எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம். இதனைத் தன்மீதான போர்ப் பிரகடனம் என்று கூறிய வடகொரியா, அணுஆயுதப் போருக்கு ஆயத்தமாக இருப்பதாகப் போர் முரசு கொட்டி வருகிறது.

 

இதனையடுத்துத் தென்கொரிய அதிபர் லீ முயுங்-பாக் தனது இராணுவத்தினரை எவ்வித விளைவுக்கும் தயாராக உஷாரான நிலையில் இருக்க வேண்டும் என முப்படைத் தளபதிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதனால் கொரியத் தீபகற்பத்தில் போர் மூளலாம் என அச்சம் நிலவுகிறது.

இதற்கிடையே, வடகொரியா முழுவதும் தனது அணுஆயுதத் தாக்குதல் இலக்கினுள் இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடேன், வடகொரிய அதிபர் கிம்மின் மனதில் என்ன உள்ளது, எதற்காக இப்படி அவர் நடந்து கொள்கிறார் என்பது கடவுளுக்கே வெளிச்சம் எனக்கூறியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்