வேலூர் கிருஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், இளைஞர் ஒருவருக்கு அவரது இரத்தப் பிரிவு அல்லாத வேறொருவரின் கிட்னி மாற்றம் வெற்றிகரமாக மேற்காள்ளப் பட்டது. இத்தகைய முறையில் மாற்றுவது இந்தியாவிலேயே இதுவே முதல் முறையாகும்.21 வயதான அன்பரசு என்ற அந்த இளைஞருக்கு கிட்னி பழுதடைந்திருந்தது. அவரது இர்தப் பிரிவு O பிரிவாகும். அவருக்கு அவரது தாயார் கிட்னி வழங்க முன்வந்தார். தாயாரின் இரத்தப் பிரிவு A. என்றாலும் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் நாள் இவருக்கு வெற்றிகரமாக கிட்னி மாற்றம் செய்யப் பட்டது. இருவரும் தற்போது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை தகவல் கூறுகிறது.
இதன் மூலம் ஒரே பிரிவைச் சார்ந்த மாற்றுக் கிட்னி கிடைக்காதவர்கள் வாழ்நாள் முழுவதும் இயந்திரம் மூலம் இரத்தம் சுத்தம் செய்து கொள்வதே வழி என்ற நிலை மாறியுள்ளது.
அண்மைய காலம் வரை, ஒரே இரத்தப் பிரிவு உடையவர்களிடையே மட்டுமே கிட்னி மாற்றம் சாத்தியம் என்ற நிலை இருந்து வந்தது. அதனைத் தகர்த்து மாற்று இரத்தப் பிரிவு உள்ளவர்களின் கிட்னியையும் மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு மருத்துவமனையின் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு இருந்ததாகவும், எதிர் காலங்களில் இத்தகைய கிட்னி மாற்றங்கள் மேற்கொள்ளப் படும் என்றும் மருத்துவமனை செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




