வடகொரியா அண்மையில் அணுஆயுத ஏவுகணைப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா தன் ஏவல் எல்லைக்குள் இருப்பதாகவும், ஹவாய்த் தீவுப் பகுதியை அழித்துவிடும் அளவு தன்னிடம் அணுஆயுத பலம் கைவசம் இருப்பதாகவும் அது எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த எச்சரிக்கை குறித்து ஒபாமாவிடம் கருத்துக் கேட்ட போது, வடகொரியாவின் மிரட்டலுக்கு அமெரிக்கா அச்சப்படப் போவதில்லை என்றும் இது போன்ற மிரட்டலைச் சமாளிக்க அமெரிக்க அரசும் இராணுவமும் ஆயத்தமாகவே உள்ளன என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலுக்கான முன்னோட்டமாக இக்கருத்தை எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு, "தற்போதைய சூழலில் எதையும் ஊகிக்க விரும்பவில்லை; ஆனால் அமெரிக்கா தாக்கப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். அமெரிக்க மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், ஒவ்வொரு t எழுத்தும் கோடிடப்பட்டுள்ளது; ஒவ்வொரு i எழுத்தும் புள்ளியிடப்பட்டுள்ளது என்பதே" என்று ஒபாமா பதிலளித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|





அப்டின்னா என்னாங்கோ?