உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் சார்பாக வருகிற அக்டோபர் மாதம் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது. இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் அனந்த கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்"உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பாக வருகிற அக்டோபர் மாதம் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது.
தமிழ் தகவல் தொழில் நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் சந்திப்பதற்காக அறிஞர்கள், வல்லுனர்கள்கூடி விவாதிக்கின்ற ஒரு மாநாடாக இது நடைபெறும் என்றார்.
ஜெர்மன் நாட்டில் உள்ள கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையமும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமான உத்தமம் அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டிற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இம்மாநாட்டில் தமிழ் இன்டர்நெட், சோஷியல் நெட்வெர்கில் மொபைல் போன்களில் தமிழ் என்பது உட்பட 8 விதமான தலைப்பில் கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன. ஏராளமான கணினித் தமிழ் வல்லுநர்கள் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வருகின்ற வளர்ச்சிகளையும், சவால்களையும் எதிர்கொள்வதற்குரிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதுடன், தீர்வுகளை உருவாக்குவதற்கும் இம்மாநாடு உதவும்.
மாநாட்டிற்கான கட்டுரைகளை அளிக்க விரும்புபவர்கள் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற முகவரிக்கு மின்அஞ்சல் செய்யலாம். வல்லுநர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கு ஜெர்மன் நாட்டிற்கு வருவதற்கான வசதி, தங்கும் வசதியை இந்த அமைப்பு ஏற்படுத்தித் தரும்.
2010ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இத்தகைய தமிழ் இணைய மாநாடு நடத்துவது குறித்து தமிழக முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்ய உள்ளோம். தமிழ் மொழிக்கான பொதுவான கணினிக் குறியீட்டை உருவாக்கி முதலமைச்சரின் ஒப்புதலோடு, அதை அங்கீகரிப்பதற்கும் இந்த மாநாட்டில் முடிவெடுக்கப்படும்.
கணினி வழித்தமிழை ஒரே சீராக உருவாக்கி அதை மாநில அரசு அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறோம்" என்று கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (2)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




