30 நாட்களில் மூன்று கிரகணங்கள் என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் முதல் நிகழ்வாக இன்று சந்திர கிரகணம் ஏற்படும்.
இன்று நிகழும் சந்திரகிரகணம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே தெரியும். இந்தியாவில் தெரியாது என அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் செல்லும்போது, பூமியின் நிழல், சந்திரனின் ஒளியை சற்று குறைக்கிறது. இதை சந்திர கிரகணம் என்கிறோம். சந்திரன் முழுமையாக மறைக்கப்படுவதில்லை. இந்த நிகழ்வு பவுர்ணமியான இன்று நடைபெறும்.
இது குறித்து சென்னை, அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது: இன்று நடைபெறும் சந்திர கிரகணம், இந்திய நேரப்படி பகல் 2 மணிக்கு துவங்கி, 4.15 மணிக்கு முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆஸ்திரேலியா, பசிபிக் கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகள், அமெரிக்காவில் தெரியும் என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




