இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இந்திய நீர்மூழ்கி பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பாகிஸ்தான்

E-mail அச்செடுக்க

இந்தியா சில நாட்களுக்கு முன் நாட்டுக்கு அர்ப்பணித்த அணு உலை நீர்மூழ்கிப் போர்க்கப்பல் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தியா இந்த நீர்மூழ்கியைப் பயன்படுத்தத் தொடங்கியதன் மூலம் தெற்காசியாவில் சமச்சீரற்ற நிலையை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

"பாகிஸ்தான் ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதை ஒரு போதும் விரும்புவதில்லை; இருப்பினும் தன் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும், அண்டை நாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் தக்க நடவடிக்கைகள் எடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் அணு உலை நீர்மூழ்கியான ஐ என் எஸ் அரிஹந்த், 700 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இலக்குகளையும் கடல் நீருக்கு அடியில் இருந்தவாறே தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: gowthaman, July 28, 2009
india will fuck u

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்