இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஐஃபோன் மென்பொருள் அபாயம்: ஆப்பிள் நிவர்த்தி செய்தது!

E-mail அச்செடுக்க

ஆப்பிள் நிறுவனத்தின் கைப்பேசியான ஐஃபோனின் இயங்குதளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் மென்பொருள் குறைபாட்டை அந்நிறுவனம் நீக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. ஆப்பிள் தளத்தைத் தொடர்பு கொண்டு இந்த நிவர்த்திக்கான அப்டேட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆப்பிள் அறிவித்துள்ளது.

லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வரும் கருப்புத் தொப்பி மாநாட்டில் (Black Hat Conference) இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கருப்புத் தொப்பி மாநாடு என்பது உலகெங்கிலும் இருந்து திறமைமிக்க நாணயம் மிக்க ஹேக்கர்கள் (Ethical Hackers) பங்குபெறும் மாநாடு ஆகும்.

இந்தக் குறைபாடுள்ள ஐஃபோன்களுக்கு குறிப்பிட்ட கட்டளைகள் அடங்கிய ஒரே ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால், அந்த ஐஃபோன் குறுஞ்செய்தி அனுப்பியவரின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். ஐஃபோன்கள் ஆப்பிளின் மேக் இயங்குதளத்தையும் கூகிளின் ஆண்ட்ராய்டு தளத்தையும் மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் மொபைல் இயங்குதளத்தையும் பயன்படுத்துகின்றன.

இக்குறைபாடு இயங்குதளம் எதுவாயினும் ஐஃபோன்களைப் பாதிக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்