இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விடுதலைநாள் விழா: கருணாநிதி கொடியேற்றி உரை!

E-mail அச்செடுக்க

63 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாசகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். உரைக்குப் பின் கல்பனா சாவ்லா விருதுகளையும் அவர் வழங்கினார்.


முதல்வர் கருணாநிதியின் சுதந்திர தின உரைச் சுருக்கம் வருமாறு:

தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 4 ஆயிரம் ரூபாய்களிலிருந்து 5 ஆயிரம் ரூபாய்களாக உயர்த்தப்படும்.

தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும்.

இந்தியாவிலேயே முதலாவது மாநிலமாகத் தமிழகம் திகழ தொடர்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

18 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்து திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது மகிழ்வுக்குரியது.

ஏழைகளின் நலனைக் கொண்டு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுவது, இலவச எரிவாயு இணைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி என இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றத் தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

முதல்வரின் உரைக்குப் பின் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மருத்துவர் ராஜமகேஷ்வரி, உசிலம்பட்டியைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை ராஜலட்சுமி, திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனின் தாய் புஷ்பாஞ்சலி ஆகியோருக்கு கல்பனா சாவ்லா விருதுகளை அவர் வழங்கினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்