சென்னையை கடந்த சில நாட்களாக வாட்டியெடுக்கும் வெப்பத்தை போக்கும் வகையில் நேற்று நள்ளிரவு மழை பெய்தது. நள்ளிரவு லேசான சாரலுடன் பெய்யத் தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல அடைமழையாகக் கொட்டி தீர்த்தது.
இதனால் வீதியெங்கும் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. சென்னையில் மாதவரம், கொடுங்கையூர்,
புளியந்தோப்பு, ராயபுரம், வண்ணாரபேட்டை, தியாகராயர்நகர், திருவல்லிக்கேணி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் என அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சுமார் 2.30 மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
இது குறித்து வானிலை இலாகா அதிகாரி ஒருவர், வழக்கமாக வடகிழக்கு பருவமழை தான் சென்னையில் பெய்யும். அக்டோபர் மாதம் தான் அதற்கான பருவகாலம் தொடங்கும். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளது. இந்த மழை தொடர்ச்சியாக பெய்யாது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




