இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

காகிதத் தாளிகையில் காணொளி விளம்பரம்!

E-mail அச்செடுக்க

உலகில் முதன் முறையாக காகிதத்தில் அச்சிடப்படும் தாளிகை ஒன்றில் அசைவுப்படமாக காணொளி விளம்பரம் வர இருக்கிறது. அமெரிக்காவின் பொழுதுபோக்குத் துறைசார் தாளிகையான "என்டெர்டெய்ன்மென்ட் வீக்லி", தனது 18 செப்டம்பர் நாளிட்ட வெளியீட்டில் சில பதிப்புகளில் மட்டும் இதனைச் செய்ய இருக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் இவ்விரு நகரங்களின் பதிப்புகளில் சில குறிப்பிட்ட வெளியீடுகளில் இந்தக் காணொளி விளம்பரம் வர இருக்கிறது. இவ்விளம்பரத்துக்காக அமெரிசிப் என்ற நுட்ப நிறுவனம், மிகச் சிறிய சில்லுகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது. தாள்களின் ஊடே இச்சில்லுகள் கவனமாகச் செருகப்பட்டு, இக்காணொளிகள் இச்சில்லுகளில் பதியப்பெறும்.

பக்கங்கள் திறக்கப்படும் போதோ புரட்டப்படும் போதோ, இச்சில்லுகள் மின்னூட்டப் பெற்று, விளம்பரங்கள் உயிர்பெறும். ஒவ்வொரு சில்லும் கிட்டத்தட்ட 40 நிமிட அளவுக்குக் காணொளிகளைச் சேமித்து வைத்துக் கொள்ளும் திறன் பெற்றதாக இருக்கும்.

-இந்நேரம் அறிவியல் செய்திப் பிரிவு.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: raja , October 15, 2010
அருமையான ஆச்சர்யமான செய்திsmilies/smiley.gif

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்