இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஹோமியோபதிக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

E-mail அச்செடுக்க

ஹோமியோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்துக்கு மாற்று மருத்துவ முறை நம்பத் தக்கதன்று என்றும், இம்முறைப்படி சிகிச்சை பெறுவோர் உரிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதனைத் தொடர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஹோமியோபதி மருத்துவ முறையில் நோய்க்காரணிகளான கிருமிகளை எதிர்க்கும் எந்த ஒரு மூலப் பொருள்களும் இருப்பதில்லை என்றும், சோதனைக் கூட ஆய்வுகளில் இம்மருந்துகள் கிருமிகளை எதிர்த்து எவ்வொரு எதிர்வினையும் புரியவில்லை என்றும் WHO கூறியுள்ளது.

என்புருக்கி, மலேரியா, வயிற்றுப்போக்கு, எயிட்ஸ் போன்ற கொடும் நோய்களுக்கு மருந்துகள் இருப்பதாக ஹோமியோபதியினர் சொல்லிக் கொண்டாலும், இந்நோய்களை எதிர்த்து இம்மருந்துகள் செயலாற்றவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே உலகளாவிய அரசுகள் ஹோமியோபதி முறையைத் தகுந்த கட்டுப்பாடுகளுடன் மட்டுமே சில சாதாரண நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்த மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: ILAVARASAN PA, December 09, 2009
homeopathy muraiil athigam sulphuric acid than ubayogapaduthapadukirathu aenru
oru kuttrachaatu ullathu. athu pattri ethakilum vilakkam kidaikkuma ?
0
...
எழுதியவர்: jai, May 23, 2010
appadiya ilavarasan neengal alopathy dr...thane....ipadiellam kutram kurakudathu...
0
...
எழுதியவர்: Dr.T.Palanivelrajan,B.H.M.S.,, May 25, 2010
ஜான் டால்டன் அணு மாதிரி கொள்கையை வெளியிட்ட போது அணுவின் மூலக்கூறு கொள்கைகளை இந்த உலகம் ஏற்று கொள்ளாமல் மறுத்து வாதிட்டது.ஆனால் பின்னாளில் அவரின் கொள்கைகளை இன்றுவரை மறுப்பதற்கு எவரும் இல்லை.அதுபோல ஹோமியோபதியின் மருந்து பற்றிய மூலக்கூறு விளக்கங்களுக்கு இன்றைய அறிவியல் வளர்ச்சியில் சரியான விடை கிடைக்காவிட்டாலும் எதிர்வரும் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.அதுவரை தூற்றுவார் தொடரட்டும்.நாம் பொறுமை காப்போம்.
0
...
எழுதியவர்: மரு. லெ. பூபதி பரங்கிபேட்டை , October 09, 2010
ஹோமாபதி சிகிச்சை பெறுவோர் உரிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதனைத் தொடர வேண்டாம் என்று உலக சுகாதார மையம் சொல்லுகின்றதேன்றால் எனைய மருத்துவ முறைகளை மருத்துவ ஆலோசனை இல்லாமல் சாப்பிடலாம் என்று கொள்ளலாமா? எந்த மருத்துவ முறை ஆனாலும் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுதான் சாப்பிடவேண்டும். நான் சித்த மருத்துவராக இருந்தாலும் ஹோமியோபதி மருத்துவத்தில் பல நோயாளிகள் குனமடைந்திருப்பதை கண்கூடாக கண்டு இருக்கிறேன். குறை என்று பார்த்தல் எந்த மருதுவதில்தான் குறை இல்லை? லக்கும் தீனக்கும் வலியதீன் இதற்கும் பொருந்தும்.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்