இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஷீஷாவும் சிகரெட்டைப் போன்றே கெடுதல் நிறைந்தது!

E-mail அச்செடுக்க

மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக இருக்கும் ஷீஷா என்றும் ஹப்ளி பப்ளி என்றும் அழைக்கப்படும் குடுவைப் புகைத்தல் சிகரெட்டைப் போன்றே கெடுதல்கள் நிறைந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்புகைப் பழக்கம் சாதாரணமாக சிகரெட் புகைக்கத் தயங்குபவர்கள் தயக்கமின்றி  ஏற்றுக் கொள்வதாகும்.

ஷீஷா எனப்படும் குடுவைப் புகைத்தலில் புகையிலையுடன் பல்வேறு வகையான மூலிகைகளைக் கலந்தும் சில பழ வாசனைகளைக் கலந்தும் குடுவையில் இட்டு புகைக்கும் போது, புகையிலை முழுதாக ஆக்சிஜனேற்றம் அடையாததால் பெருமளவு கார்பன் மோனாக்சைடு உண்டாகிறது.

இவ்வாயு மிகவும் கெடுதல் நிறைந்ததாகும். இதைத் தொடர்ந்து சுவாசித்து வந்தால் மூளைச் சிதைவு ஏற்படும். மத்திய கிழக்கில் பணிபுரியும் இந்தியர்கள் பலரும் இப்புகைப்பழக்கம் கெடுதல் இல்லாதது எனத் தவறான புரிதல் கொண்டு, நண்பர்களுடன் கூட்டாக இதைப் புகைக்கின்றனர்.

அதோடு, இதனைப் புகைக்கப் பயன்படுத்தும் குழாய் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் தொற்று நோய் பரவக் காரணியாய் இருப்பதும் கவலை தரும் இன்னொரு தகவல்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: மரு. லெ. பூபதி பரங்கிபேட்டை , October 09, 2010
பீர் சாப்பிட்டால் உடலுக்கு குலிர்ச்சி என்று எப்படி தவறாக (நமக்கு தோதாக) எடுத்துக்கொள்ளுகிறோமோ, அதை போலத்தான் எதை எடுத்தாலும் முலிகை கலந்தது என்று கூறி ஏமாற தயார் ஆகி விடுகிறோம். நிதானமாக நடுநிலையுடன் சிந்தித்தாலே உண்மை பட்டவர்த்தமாக தெரியும்
எனது டிப்ஸ்கலை கீழ்க்கண்ட வலைத்தளத்தில் பார்த்து பையனடைவீர் www.boopathysiddha.blogspot.com

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்