இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டிஸ்கவரி விண்ணில் சீறிப் பாய்ந்தது!

E-mail அச்செடுக்க

பணியில் இருந்து வரும் விண்கலங்களில் ஒன்றான டிஸ்கவரி புளோரிடாவிலுள்ள கென்னடி விண் மையத்திலிருந்து நேற்று உள்ளூர் நேரம் இரவு 11:59க்கு விண்ணில் சீறிப் பாய்ந்தது. டிஸ்கவரி விண்ணில் 13 நாள் பயணத்தைச் செய்யும்.

இப்பயணத்தில் இது பன்னாட்டு விண் நிலையத்தை அடைந்து அங்குத் தங்கி இருக்கும் விண்வெளி வீரர்களுக்கான் புதிய உறங்கும் அறையை எடுத்துச் செல்கிறது. அதோடு விண்வெளி வீரர்களுக்கான உடற்பயிற்சி சாதனங்களையும் கொண்டு செல்கிறது. விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகளைப் புவிக்குக் கொண்டு வருவதற்கான கொள்கலன்களையும் டிஸ்கவரி எடுத்துச் செல்கிறது.

டிஸ்கவரி, ஒரு விண்வெளி வீரரைப் பன்னாட்டு விண் நிலையத்தில் இறக்கிவிட்டு ஆறு வாரங்களாக அங்கிருக்கும் இன்னொருவரைப் புவிக்கு அழைத்துவரும். அதோடு அங்குள்ள அம்மோனியா கிடங்கில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை நீக்கத்தேவையான உதிரிகளையும் டிஸ்கவரி எடுத்துச் செல்கிறது.

-இந்நேரம் விண் செய்திப் பிரிவு

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்