இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சந்திரயானுடன் தொடர்பு அறுந்தது!

E-mail அச்செடுக்க

இந்தியா நிலவின் பரப்பை ஆராய அனுப்பி வைத்த சந்திரயான் துணைக்கோளுடனான எல்லாத் தொடர்புகளும் அறுந்து போய்விட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்று காலை முதல் சந்திரயானுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிகிறது.

ஆந்திராவிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான், நிலவைச் சுற்றிவந்து நிலவின் முப்பரிமாணப் படங்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 38 கோடி ரூபாய் செலவில் ஏவப்பட்ட சந்திரயான் ஏவப்பட்ட சில மாதங்களுக்குள்ளாகவே தொடர்பறுந்து போய் இருப்பது இத்திட்டத்துக்கான மிகப்பெரிய பின்னடைவு ஆகும்.

700 வாட்டுகள் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரியக் கலன்கள் கொண்ட சந்திரயானில், இம்மாதத் தொடக்கத்திலேயே பல கோளாறுகள் இருப்பது தெரியவந்தது. அவை சரி செய்யப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை இன்று வந்த தகவல்கள் பொய்யாக்கி உள்ளன.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்