இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கூகிளின் ஜிமெயில் மீண்டும் செயலிழப்பு!

E-mail அச்செடுக்க

உலகின் முன்னணி தேடுபொறி கூகிளின் ஜிமெயில் சேவை நேற்று வளைகுடா நேரம் இரவு 10:30 முதல் அதிகாலை 12:30 வரை செயலிழந்து போனது. உலகெங்கிலும் இருந்து பல்வேறு பயனர்கள் பாதிக்கப்பட்டனர். கூகிள் தன் ஜிமெயில் வழங்கிகளின் முழு அளவிலான பளுவை எதிர்கொள்ளும் திறனை அதீதமாக எடை போட்டது தான் இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.

பொதுவாக கூகிள் தனது ஜிமெயில் வழங்கிகளைச் சில பழுதுநீக்கல்களுக்காக சேவையிலிருந்து விலக்கி வைப்பது வழக்கம் தான் எனினும், பயனர்கள் இதனை உணராவண்ணம் இதுவரை செய்து வந்தது. ஆனால் நேற்று வழங்கிகளின் மீதான பளுவைக் குறைவாக எடைபோட்டு, சேவையில் இருக்கும் பிற வழங்கிகள் அதனைச் சமாளிக்கும் என நினைத்து தன்னுடைய ரவுட்டர்களில் சில மாற்றங்களைச் செய்தது.

ஆனால் நேற்று இந்த ரவுட்டர்கள் பளுவைத் தாங்காமல் செயலிழந்து போய் விட்டன. இதனால்  ஒன்றன் பின் ஒன்றாக வழங்கிகளும் திணறிப் போய் செயலிழந்தன.

இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பின் நிலைமையை கூகிள் கட்டுக்குள் கொண்டுவந்தது. ஜிமெயில் மிக அண்மையில் தான் பீட்டா நிலையில் இருந்து வெளிவந்தது எனப்தும், தன்னுடைய மின்மடல் சேவைகள் தன் போட்டியாளர்களின் சேவையை விட மேம்பட்டது என்று கூகிள் கூறிவந்ததும் நினைவு கூறத் தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்