இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க

E-mail அச்செடுக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:

முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.


உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும்.

பின்குறிப்பு:

நாம் கூறிய Use bitmap fonts  என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.

Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்.

கருத்துக்கள் (28)Add Comment
0
...
எழுதியவர்: கீதா கணேஷ், November 05, 2009
பயனுள்ள டிப்ஸ்.

பல நாட்கள் என் பிரச்னைக்கான உதவி கிடைக்காமல் சிரமம் இருந்தது. எனது அனைத்து மெயில்களையும் தமிழில் இப்போது படிக்கிறேன். நன்றி.
0
...
எழுதியவர்: KMN Muhammad Ismail, February 04, 2010
Thank you very much for your kind information on this regard.

Is there any possibilities to read your website with newshunt software? Because, Dinamalar and few of other South Indian language news papers available with that software and very easy to browse as well.

Your suggestion on this matter is highly appreciated.

Thanks.
0
...
எழுதியவர்: siraj, March 06, 2010
Dear all

i wold like to purchesr a mobile phone,with internet and yahoo voice chat fecility, which mobile is suitable for this note i dont have the wifi fecility any of our friends knows pl advise me .

thanks
siraj
மல்லிகை நேசன்
...
எழுதியவர்: மல்லிகை நேசன், April 10, 2010
உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் - Unable to download via iphone. can you explain more clearly?
0
...
எழுதியவர்: அப்துல் பாஸித், April 24, 2010
நான் இரண்டு வருடமாக இதைத் தான் தேடி வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்.
0
...
எழுதியவர்: mohamedali, April 25, 2010
மிகவும் பயனுள்ள தகவல்.
0
...
எழுதியவர்: Ahamed Rashid, Doha, Qatar, April 26, 2010
பயனுள்ள தகவல்,நன்றி நன்றி நன்றி..........................
0
...
எழுதியவர்: Selvakumar, April 27, 2010
Wi-Fi போன் மூலம் தமிழ் படிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஏக்கமும் பிரச்னையும் இந்த தகவல் மூலம் தீர்ந்தது. மிக்க நன்றி!

ஆனால், உங்கள் நியூஸை நிறைய பேர் அப்பட்டமாக காப்பி செய்துள்ளார்களே..கவனிக்கவில்லையா
0
...
எழுதியவர்: samsudeen, June 12, 2010
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

மிகவும் பயனுள்ள தகவல்.

சகோதரர்களே, நான் புதிதாக Nokia E-63 மொபைல் வாங்கியுள்ளேன். அதில் Opera.com சென்று operamini install செய்தேன். அது என்னுடைய மொபைலில் Intallation பகுதியில் சென்று அமர்ந்தது. நான் அதை ஓபன் செய்தேன். அது மீண்டும் install செய்வதற்காக இன்டர்நெட் கன்னெக்ஷன் ஆன் செய்ய வேண்டும் என்று கேட்டது நான் என்னுடைய ரூமில் உள்ள நெட் கன்னெக்ஷனை Wlan மூலம் கன்னெக்ட் செய்தேன். ஆனால் அது install ஆகாமல் மீண்டும் மீண்டும் நெட் கன்னெக்ட் செய்ய வேண்டும் என்று கேட்டது. இறுதியில் அது உங்களுடைய நெட் கன்னெக்ஷனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொல்லிவிட்டது. நான் மீண்டும் Opera website சென்று Operamobile என்பதை டவுன்லோடு செய்து அதை இன்ஸ்டால் செய்தேன். அது இன்ஸ்டால் ஆன உடன் என்னுடைய மொபைலில் Intallation பகுதியில் சென்று அமர்ந்தது. நான் அதை ஓபன் செய்தேன். அது மீண்டும் install செய்வதற்காக இன்டர்நெட் கன்னெக்ஷன் ஆன் செய்ய வேண்டும் என்று கேட்டது நான் என்னுடைய ரூமில் உள்ள நெட் கன்னெக்ஷனை Wlan மூலம் கன்னெக்ட் செய்தேன். கன்னெக்ட் ஆகி முழுவதும் install ஆனது. அதன் பின் opera mini browser open ஆனது. அதில் உள்ள அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுத்தேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல்
"பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கம் அதில் இல்லை. மேலும் use bitmap fonts for complex scripts என்ற menu வாவது இருக்கிறதா? என்று அனைத்து ஆப்சன்களையும் ஒவ்வொன்றாக ஓபன் செய்து பார்த்தேன். அதிலும் இந்த ஆப்சன் இல்லை. என்னுடைய மொபைலில் நான் தமிழ் தளங்களைப்பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறேன். என்னுடைய மொபைலில் தமிழ் தளங்களைப் பார்க்க முடியுமா என்பதை எனக்குத் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் நான் என்னுடைய நண்பர்கள் இருவருடைய மொபைலிலும் (Nokia E-71, E-51) இதை install செய்து பார்த்தேன். இதே பிரச்சினை அவர்களுக்கும் இருக்கிறது. இதற்கு ஏதேனும் தீர்வு இருந்தால் என்னுடைய ஜி-மெயில் முகவரிக்கோ அல்லது இன்னேரம் வாசகர் கருத்து பகுதியிலோ இந்த தகவலைப் பதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,
சம்சுத்தீன்.
0
...
எழுதியவர்: ஆர்.பிரதீஷ் குமார், July 10, 2010
என்னுடைய மொபைல் ஜி பைவ் சைனா மொபைல் இதில் ஒபெரா நாட் சப்போர்ட்டட் என்று வருகின்றது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
0
...
எழுதியவர்: அபு நிஹான், August 17, 2010
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

மிகவும் பயனுள்ள தகவல்.

சகோதரர்களே, எனக்கும் Nokia E-71 மொபைலில் சகோ சம்சுத்தீன் சொன்னது போல் Installation இல் பிரச்சனை உள்ளது.

இந்த பிரச்சனை தீர எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன். நான் இதை என்னுடைய பிளாக்கில் வேறு பதிந்து விட்டேன். நிறைய நண்பர்கள் கேள்வி கேட்கக்கூடும். என்னுடைய அறை நண்பர்களே என்னை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அமீரகத்தில் வசிப்பதால் இங்கு skyfire Install செய்ய முடியவில்லை.

தோழமையுடன்

அபு நிஹான்
0
...
எழுதியவர்: அபு நிஹான், August 18, 2010
சகோதரர்களே,

WWW.GETJAR.COM க்கு செல்லுங்கள். உங்கள் மொபைல் மாடலை செலக்ட் செய்து அதில் search பட்டனில் opera mini browser என்று டைப் செய்தால் opera mini browser, opera mobile browser இரண்டும் search result இல் வரும். பிறகு opera mini browser ஐ செலக்ட் செய்து உங்கல் கனிப்பொறியிலோ அல்லது மடிக்கணிணியிலோ save செய்து பின்னர் USB data cable மூலம் உங்கள் மொபைலில் Install செய்யலாம்.

அல்லது உங்கள் போனில் இருந்தே நேரடியாக Browse செய்து www.getjar.com சென்று அங்கு மேலே சொன்ன search செய்து பின்னர் உங்கள் மொபைலில் நேரடியாக install செய்யலாம்.

மேலே சொன்ன இரண்டில் ஏதாவது ஒரு முறை பயன்படுத்தி Install செய்யுங்கள்.

நன்றி

தோழமையுடன்

அபு நிஹான்
0
...
எழுதியவர்: ij prakash, August 21, 2010
mobile - tamil -pdf ?
0
...
எழுதியவர்: F.Shafeeq Mohamed, August 26, 2010
Opera mobile browser ல் எவ்வாறு settings மாற்றுவது.
0
...
எழுதியவர்: ponraj, September 09, 2010
avvaru enable seithaprakum tamiil letters theriyavillai.ennudaiya phone nokia 5230.
0
...
எழுதியவர்: ரேகா கணேசன், October 18, 2010
மிக மிக மிக நன்றி. எனது நீண்ட நாள் பிரச்சினையை தெளிவாக எழுதி தீர்த்து வைத்து விட்டமைக்கு.
0
...
எழுதியவர்: Prabhu, October 28, 2010
I am having Blackberry Curve 8900, i download the opera mini browser and installed it in my device, i did the settings as instructed, still i couldn't view the articles in Tamil. Still the fonts appear as boxes. Can you please help me further???
0
...
எழுதியவர்: Prakash, November 09, 2010
Ithu enaku miga periya uthavi. Romba nandri sir..
0
...
எழுதியவர்: mujeeb, December 06, 2010
i downloaded opera moblie ver 10 in my mobile. for version how to eanabe bit map fonts.could any one assist me.In nokia e52 opera mini is not operating.even though INTERNET CONNECTION IS AVAILABLE IT IS SHOWING CONNECTION IS NOTAVAILABLE and not going to opera:config settings.but ver 10 it is going,but dont know the settings to see tamil sites.
0
...
எழுதியவர்: ark4u2005, December 18, 2010
when i go to opera:config it is showing power usert setting which u attach the pic same that.
0
...
எழுதியவர்: SWAAD, December 30, 2010
TAMIL NEWSA MOBILA PARKA WWW.NEWSHUNT .COM LA POY MOBILA DOWNLOAD PANNI USE PANNUNGA FRIENDS E63,E71.E73 ALL WIFI NOKIA MODELS
0
...
எழுதியவர்: Gani, January 19, 2011
Its an excellent information for those struggled to view the tamil font in mobile. Its working on non wi-fi mobiles also. Jazakkallahul hair.
0
...
எழுதியவர்: ஷபியுதீன், January 24, 2011
சார், என் போனில் டீபால்ட் ப்ரோசர் மட்டுமே பாக்கட் டேடா வருகிறது. ஒப்ரா மினிக்கு பாக்கட் டேடா கொடுக்க மறுக்கிறது. என் நோக்கியா போன் என்ன செய்வது. என் மொபைலில் தினமணி தளம் மட்டுமே தெளிவாக தெரிகிறது. இதற்கு பாண்ட் பிரச்சினை இல்லை. எல்லாமே இமேஜ் பார்மேட்டில் உள்ளது.
0
...
எழுதியவர்: மருதன், January 24, 2011
என் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது. இப்போது எனது போனில் தமிழ் தளங்களை நன்றாக வாசிக்க முடிகிறது. நன்றி இந்நேரம்.காம்
0
...
எழுதியவர்: sheik mohamed, February 09, 2011
என் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது. இப்போது எனது போனில் தமிழ் தளங்களை நன்றாக வாசிக்க முடிகிறது. நன்றி இந்நேரம்.காம்
0
...
எழுதியவர்: bala, February 14, 2011
u r a god this is my five year expectation thank u friend thank u
0
...
எழுதியவர்: பலராமன், November 22, 2011
அலைபேசியில் தமிழ் படிக்க/எழுத உங்களுக்கு சிக்கலாக உள்ளதா?! அலைபேசியில் தமிழில் எப்படி படிப்பது மற்றும் எழுதுவது என்பவை குறித்தான தகவல்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது! உங்களுக்கு இது உதவலாம்! - [bhttp://twitamils.com/2011/09/1...in-mobile/

அந்தப் பதிவிலேயே தேவையான சில இணையத்தொடுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது! மறக்காமல் அதையும் பார்க்கவும். நன்றி.

Please find information on "how to read and write tamil in mobile" here - [bhttp://twitamils.com/2011/09/1...in-mobile/

Thanks.
0
...
எழுதியவர்: பலராமன், November 22, 2011
நான் கொடுத்த தொடுப்பு சரியாக வேலை செய்யவில்லை! மன்னிக்கவும். இங்கே பார்க்கவும்! - http://bit.ly/mS1ywH

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்