நிலவின் வெப்ப நிலை குறித்த தவறான அனுமானத்தின் காரணமாகவே சந்திராயன்-1 திட்டத்தை நிர்ணயித்த காலத்திற்கு முன்பே முடித்துக் கொள்ள வேண்டி வந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய உயர் அதிகாரி கூறியுள்ளார்.
நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை 75 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று நாங்கள் அனுமானித்திருந்தோம். ஆனால் அது அதனைவிட அதிகமாக இருந்தது. எனவே சந்திராயனின் சுற்றுப் பாதையை நிலவிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரமாக அதிகரிக்க வேண்டி வந்தது என்று இஸ்ரோ அதிகாரி டாக்டர். டி.கே. அலெக்ஸ் கூறியுள்ளார்.
புவியீர்ப்பு விசையை அளத்தல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக சந்திராயனின் சுற்றுப்பாதை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த மே மாதம் இஸ்ரோ கூறியிருந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதியே வெப்பத்தின் காரணமாக சந்திராயனுக்குப் பிரச்சரனைகள் ஏற்பட்டு விட்டதாகவும், எனவே இஸ்ரோ சந்திராயனின் சில கருவிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்தது என்றும் செய்திகள் கூறுகின்றன.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|