சென்ற ஆகஸ்டு 29 அன்று விண்ணில் சீறிப்பாய்ந்த டிஸ்கவரி விண்கலம் தன் பணியை முடித்துக் கொண்டு கலிஃபோர்னியாவிலுள்ள எட்வர்ட்ஸ் விண் ஏவு தளத்தில் உள்ளூர் நேரம் நேற்று மாலை 1753க்குப் பத்திரமாகத் தரையிறங்கியது.
விண்ணில் புவியை வலம் வந்து கொண்டிருக்கும் பன்னாட்டு விண் நிலையத்திற்குத் தேவையான சில பொருட்களையும், விண்வெளிவீரர்களையும் ஏற்றிச் சென்ற டிஸ்கவரி இம்முறை ஃபுளோரிடாவில் வியாழன் அன்றே தரையிறங்க முயற்சித்தும் அது இயலாமல் போனதாலேயே கலிஃபோர்னியாவில் தரையிறங்க நேரிட்டது.
கலிஃபோர்னியாவில் தரையிறங்கிய டிஸ்கவரியை ஃபுளோரிடா எடுத்துச் செல்ல 1.7 மில்லியன் டாலர்கள் செலவு பிடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
இன்னும் ஆறு பயணங்கள் பன்னாட்டு விண்நிலையத்திற்கு மேற்கொள்ளப்படும் என்றும், அதன் முடிவில் பன்னாட்டு விண் நிலையம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுவிடும் என்றும் தெரிகிறது.
பன்னாட்டு விண் நிலையத்திற்கான அடுத்த பயணத்தை அட்லாண்டிஸ் விண்கலம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-இந்நேரம் விண் செய்திப் பிரிவு
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




