இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தேடுபொறி சந்தையில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்!

E-mail அச்செடுக்க

மைக்ரோசாஃப்ட் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்த புதிய தேடுபொறியான பிங் சிறிது சிறிதாக தேடுபொறி சந்தையில் முன்னேறி வருகிறது என இத்துறைசார் ஆய்வு நிறுவனம் காம்ஸ்கோர் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் 8.9 விழுக்காடு சந்தையைப் பிடித்திருந்த பிங் ஆகஸ்டு இறுதியில் 9.3 விழுக்காடு சந்தையைப் பிடித்தது. கூகிளின் 65 விழுக்காடு சந்தையை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய அளவே என்றாலும், மைரோசாஃப்டின் முன்னேற்றம் கூகிளின் சந்தையை விழுங்கியே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றத்தின்படி, கூகிளை விட பிங்கை இணையத்தில் தேடுபவர்கள் முதன்மையாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக மைக்ரோசாஃப்ட் அண்மையில் தனது தேடுபொறியில் அறிமுகப்படுத்திய படம் வழித் தேடல் பயனர்களுக்குப் பிடித்துப் போய் உள்ளதாகத் தெரிகிறது.

இதனால் விழித்துக் கொண்ட கூகிள் தனது தேடுபொறியில் பல நுணுக்க மாற்றங்களைச் செய்து கஃபைன் என்ற பெயரில் வெகு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்