இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஓசியன் சாட்-2 விண்ணில் ஏவப்பட்டது!

E-mail அச்செடுக்க
ஓசியன் சாட்-2 உள்பட 7 செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11:51 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டன.

ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 11:51 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி.-14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுன்ட் டவுன் திங்கள் கிழமை தொடங்கியிருந்தது.
இந்த ராக்கெட்டில் ஐரோப்பிய பல்கலைக் கழகங்கள் வடிவமைத்த 6 சிறிய வகை செயற்கைக் கோள்களும், ஓசியன் சாட் 2 செயற்கோளும் இடம் பெற்றிருந்தன. ஓசியன் சாட் 2 செயற்கைக் கோள் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் இஸ்ரோ வடிவமைத்ததாகும். கடல் வளம் குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் நாட்டின் கடற்பகுதிகளை மிகத் துல்லியமாக படம் பிடித்து, இயற்கை பேரிடர், வானிலை, புயல் சின்னம் உருவாகும் இடத்தைக் கண்டறியவும் உதவும். மீன்வளம் உள்ளிட்ட கடல் சார்ந்த கனிம வளத்தை கண்டறிதல் உள்ளிட்ட பல பணிகளையும் மேற்கொள்ளும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டதைக் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் மாதவன் நாயர் மற்றும் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் பார்வையிட்டனர்.

பி.எஸ்.எல்.வி. - சி 14 ராக்கெட் 147 அடி உயரமும், சுமார் 230 டன் எடையும் கொண்டது. "ஓசன்சாட்-2' செயற்கைக்கோள் 920 கிலோ எடை கொண்டது. இதில் ஆய்வுப் பணிகளுக்காக, கலர் மானிட்டர், "க்யூ பேண்ட்' பென்சில் பீம் ஸ்கேட்ரோமீட்டர் மற்றும் ரேடியோ அகுல்டேஷன் சவுண்டர் பார் அட்மாஸ்பெரிக் ஸ்டடிஸ் (ரோஸô) ஆகிய அதிநவீன கருவிகள் உள்ளன.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்