இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பாக். உளவாளி முன்னாள் இராணுவ வீரர் சுதன் சுதாகர் கைது!

E-mail அச்செடுக்க

பாக்கிஸ்தான் உளவாளிபீகார்: தலைநகர் பாட்னாவில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பாக்கிஸ்தான் உளவாளியாக செயல்பட்டதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்த முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.


இந்திய ராணுவத்தில் 5 ஆண்டுகாலம் சிப்பாயாக பணிபுரிந்தவர் சுதன் சுதாகர். இவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ராணூவத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பாட்னா அருகே கான்கர்பாக் என்ற இடத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவர் பதுங்கி இருந்தது காவல்துறைக்கு தெரியவந்தது இதனைதொடர்ந்து காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவரிடம் இருந்து ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

மேலும் விசாரணையில் அவருக்கு ஐ எஸ் ஐ ஏஜெண்டுகளுடன் உள்ள தொடர்பும் வெளிவந்திருக்கிறது இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகளின் வரைபடங்கள் ஏவுகணை வகைகள் மற்றும் அதன் தொழிற்நுட்பம் பற்றிய விவரங்கள் அதன் இருப்பிடங்கள் போன்றவைகள் அடங்கிய தஸ்தாவேஜூகளும் கைப்பற்றபட்டன.

ராணுவத்தில் உள்ள சிப்பாய்களுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு பல உறுதியான தகவல்களை விவரங்களை சேகரித்துள்ளார், இந்திய பகுதி காஷ்மீரில் உள்ள ஏவுகணைகளின் தொழிற்நுட்பம் நிறுத்தி வைக்கபட்டுள்ள இடங்களின் வரைபடம் ஆகியவை அவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. சுதன் சுதாகரிடமிருந்து 5 சிம்கார்டுகளும் ஒரு மொபைல் போனையும் கைப்பற்றிய காவல்துறையினர் அதிலுள்ள நேபாளநாட்டு தொலை பேசி எண்களை கொண்ட சிம்கார்டை கைப்பற்றியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்