இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

எயிட்ஸுக்கு மருந்து ரெடி!

E-mail அச்செடுக்க

சோதனை முயற்சியில் கண்டறியப்பட்ட எயிட்ஸ் உயிர் கொல்லி நோய்க்கான புதிய மருந்து, நோயின் வீரியத்தைக் குறைப்பதில் வெற்றிகரமாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னர் சோதனை செய்யப்பட்டு தோல்வியடைந்த அல்வாக் கானரி போக்ஸ், எய்ட்ஸ் வாக்ஸ் ஆகிய மருந்துகளிலிருந்து இப்புதிய மருந்து புது உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எயிட்ஸ் நோய்க்கான கண்டுபிடிப்பில் அமெரிக்க இராணுவ விஞ்ஞானிகளும் தாய்லாந்து உடல் ஆரோக்கிய அமைச்சகமும் இணைந்து பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்ட இப்புதிய மருந்தை, தாய்லாந்தில் 16,000 க்கும் அதிகமானவர்களுக்குக் கொடுத்து சோதனை நடத்தியதில், எயிட்ஸ் வைரஸான எச்.ஐ.வி பகர்வது 31.2 சதவீதம் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

வியாபாரத்திற்காக தயாரிக்கப்படும் மருந்திற்கான முதல் படியே இப்பரிசோதனை என தாய்லாந்து உடல் ஆரோக்கிய அமைச்சர் விதயா கியூபாரடே கூறினார். புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த எயிட்ஸ் மருந்து ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முந்தைய தோல்வியுற்ற இரு மருந்துகளின் கூட்டு கலவை, எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான காரணம் என்ன என்பது இதுவரை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

எயிட்ஸுக்கான புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை உலக ஆரோக்கிய அமைப்பும் ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன. எச்.ஐ.வி வைரஸைக் கட்டுப்படுத்த இப்புதிய மருந்தினால் முடியும் என்பது மிக முக்கியமான விஞ்ஞான சாதனை என ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகள் புகழாரம் சூட்டின.

புதிய மருந்தை 18 மற்றும் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களில் சோதனை செய்யப்பட்டது.  மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட இச்சோதனையில் மருந்து கொடுக்கப்பட்டவர்களில் நோயின் பாதிப்பு 31.2 சதவீதம் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிகமான ஆய்வு மற்றும் பரிசோதனைகளின் மூலம் மட்டுமே புதிய மருந்தை உபயோகிக்க முடியும் என அமெரிக்காவிலுள்ள நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் அலர்ஜி அண்ட் இன்பெக்ஷஸ் டிஸீஸஸ் டைரக்டர் டாக்டர். அந்தோணி போஸி அறிவித்துள்ளார்.

கருத்துக்கள் (2)Add Comment
0
...
எழுதியவர்: younus, December 31, 2009
thahaada vuravu matrum orina cherkayaal thaan AIDS athihapadiyaha varuhirathu endru therihirathu. pinnar en ivarhan adai thedi pohirarhal. pattal thaan puthi varum. halalana vuravu AIDS varave varathu.kathna enum sunnath panninaalum AIDS thaduka paduhirathu.
0
...
எழுதியவர்: மரு. லெ. பூபதி , October 08, 2010
1998 வாக்கில் தாம்பரம் சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் பேராசிரியர் டாக்டர் தெய்வநாயகம் அவர்களது தலைமயில் 5 ஆண்டுகள் நடைபெற்ற எய்ட்ஸ்க்கான ஆராய்ச்சி முடிவில், மற்று முறை மருத்துவமான அல்லோபதி மருத்துவத்தில் 2 வாரத்தில் குறையும் வைரல் லோட், நமது சித்த மருத்துவத்தில் பெரும் செலவு இல்லது 2 மாதத்தில் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சார்பாக நான் 4 வருடம் கலந்துகொண்டு இந்த ஆராய்ச்சி தனில் கலந்துகொண்ட முறைதனில் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த மருத்துவத்திலும் முழுவதும் தீர்க்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்