மகாராஷ்ட்ராவில் உள்ள லோகா சட்டசபை தொகுதியில் நேற்று தேர்தல் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சென்ற மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் மீது செருப்பு வீசப் பட்டது. ஆனால் செருப்பு சவான் மீது பட வில்லை.
லோகா தொகுதி எம்.எல்.ஏ வாக இருப்பவர் பிரதாப் பாட்டில் சிக்லிகர். இவர் கடந்த தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார். பின் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்தார். இந்த தேர்தலில் பிரதாப் பாட்டில் காங்கிரஸ் சார்பாக இத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து இருந்தார்.
லோகா தொகுதியோ தேசியவாதகாங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டது.இதனால் விரக்தி அடைந்த அவரது ஆதரவாளர் ஒருவர் பேரணியில் கலந்து கொண்ட முதல்வர் சவான் மீது செருப்பை வீசியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




