திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் திராவிட இயக்கத் தலைவர்கள் பெயரில் முதுகலைக் கல்வி தொடங்க சென்னைப் பல்கலைக் கழகம் உத்தேசித்துள்ளது.முதுகலை கலையியலில் பெரியார் சிந்தனை, அண்ணா சிந்தனை மற்றும் கலைஞர் சிந்தனை ஆகிய பாடங்கள் விரைவில் அறிமுகப் படுத்தப்படும். வரும் கல்வியாண்டு முதல் இப்பாடங்களைத் தொடங்க தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள துணை வேந்தர் திருவாசகம் கூறியுள்ளார்.
இந்தப் பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு பல்கலைக் கழகக் கல்விக் குழு மற்றும் செனட் ஆகியவற்றில் பெற வேண்டிய அனுமதி விரைவில் பெறப்படும் என்றம் அவர் கூறினார்.
இந்தப் பாடப்பிரிவுகள் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் கற்பிக்கப்படும் என்றும், தொலைதூரக் கல்வி முறையிலும் இந்தப் பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

எழுதியவர்: karuvaimurugu, September 16, 2010
poda pokkathavne , tamilarkalin urimaikalai surandi pilaitha kattu vilangandi kunam padaitha diravida iyakka naatharigalin valviyal tamilarkalukku thevaiyillai. tamilargalai sinthikka vidamal seitha vanderi koottathinarin valvinai padithu melum muttalakka parkindranar , koothadikalin valkai yengalukku thevaiyillai. inimelum porukka mattom chennai palkalaikalagam kolai kalamaga maarum.
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




