இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

புராதன கால குடியிருப்புப் படிமங்கள் இலங்கை வடமராட்சியில்!

E-mail அச்செடுக்க
புராதன காலத்தில் மனித குடியிருப்புகளின் படிமங்கள் வடமராட்சியின் கிழக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொல் பொருளியல் துறையின் இயக்குநர் டாக்டர் செனரத் திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அங்கு மூன்று மனித குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த குடியிருப்புகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரந்திருந்ததாகவும் இந்த சான்றுகள் யாழ் குடாநாட்டில் வரலாற்றுப் பின்னணியை நிரூபிப்பதற்கு மிக முக்கிய சான்றுகள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு வேறுபட்ட நிறங்களில் ஓவியமாக தீட்டியிருந்த களிமண் பானைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன எனவே இவற்றைக் கொண்டு எந்த சகாப்தத்தில் அக்குடியிருப்புகள் இருந்தன என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

கி.மு. ஆரம்பத்திலிருந்து கி.மு 900 ம் ஆண்டு காலப்பகுதியில் இக்குடியிருப்புகள் இருந்துள்ளதாக தாம் நம்புவதாகவும் என்றும் இயக்குநர் கூறியுள்ளார்.  ஆனால் மிகச்சரியாக இதைக் கூறமுடியாது என்றும் குறிப்பிட்டார்.

யாழ்குடாநாட்டில் கந்தரோடை பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது பெரிய மாடங்களின் படிமங்கள் கிடைத்துள்ளதாக கூறினார். இங்கு கிடைத்த சான்றுகளின்படி யாழ் குடாநாட்டில் மிகப்பழைய குடியிருப்புகள் இங்கேயே இருந்;துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

வல்லிபுர தங்க காகிதச் சுருள்களும் யாழ்குடாநாட்டின் வரலாற்றைத் தீர்மானிக்க உதவுகின்றதாகவும் அது 2 ம் நூற்றாண்டுக்குரியது என்றும் தெரிகிறது.

மேலும் ராஜாக்களின் மாளிகை மற்றும் அதன் தடாகத்தையும் கூட கண்டு பிடித்துள்ளனர். மேலும் மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளிலும் இதுபோன்ற சான்றுகள் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் தொல்பொருளியல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்