இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அடுத்த ஆண்டு தமிழிலும் இணைய தள முகவரிகள்!

E-mail அச்செடுக்க
லத்தீன் எழுத்துருக்களில் மட்டுமே இருந்து வந்த இணைய தள முகவரிகளை மற்ற மொழிகளிலும் அமைத்துக் கொள்ள இணையதள ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இணையதள உலகில் பெரும் புரட்சியை இந்த மாற்றம் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

ICANN எனப்படும் Internet Corporation fo Assigned Names and Numbers என்ற அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அரபிக், சீனம் உள்ளிட்ட மற்ற மொழி எழுத்துருக்களிலும் இணையதள முகவரிகளை அமைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளனர்.

லத்தீன் எழுத்துக்கள் அல்லாத மற்ற எழுத்துக்களுடன் அமைந்த முதல் இணையதள முகவரி அடுத்த ஆண்டு பயன்பட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதுதொடர்பாக நடைபெற்றக் கூட்டம் ஒன்றில் IDN (International Domain Names) மாற்றம் குறித்து ஒப்புதல் ஏற்பட்டது. ஆனால் இதன் சோதனை இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

1.6 பில்லியன் இணையதள பயணாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் லத்தீன் எழுத்துரு அல்லாத மற்ற எழுத்துருக்களை இணைய தளத்தில் பயன்படுத்துகின்றனர். இந்த மாற்றம் தற்போதை பயனாளர்களுக்கு மட்டுமின்றி எதிர்காலப் பயனாளர்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும் என்று Icann தலைவர் ராட் பெக்ஸ்ட்ரோம் கூறியுள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்