இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ட்யூஷன் படித்த 700 மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம்

E-mail அச்செடுக்க

பள்ளி மாணவர்கள் தனிப்பட்ட முறையில் டியூஷன் படித்தததற்காக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் மாணவர்கள் தனியாக டியூஷன் படிக்க அரசு தடைவிதித்துள்ளது.

கொல்கத்தாவிலிருந்து 180 கிமீ தொலைவில் உள்ள துர்காபூர் என்ற நகரில் உள்ள  புனித சேவியர் பள்ளி 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் ஆசிரியர்களிடம் தனியாக டியூஷன் படித்ததற்காக பள்ளியிலிருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தனியாக டியூஷன் படிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தும் மாணவர்கள் தொடர்ந்து படித்து வந்ததால், இடைநீக்க முடிவுக்கு வந்ததாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

தங்களில் பிள்ளைகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்