இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக புஷ் ஆதரவு

E-mail அச்செடுக்க

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக தனது நிர்வாகம் ஆதரவு தெரிவித்தது என அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்தார்.

டில்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைவர்கள் மாநாட்டில் பேசிய புஷ்,  இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்பதற்காக தனது வெளியுறவுத்துறை செயலர் முயற்சிகள் மேற்கொண்டதாகவும், ஆனால் இந்தியா உறுப்பினராவதை மற்ற நாடுகள் விரும்பவில்லை என்றார்.

இதனால் தங்களின் அதிகாரங்கள் செல்வாக்கு இழக்க நேரிடலாம் என்பதே அதற்கு காரணம். ஆனால் மாறிவரும் உலக பொருளாதார, அரசியல் அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினார்.

தனது ஆட்சி காலத்தில் இந்தியாவுடனான உறவு மேம்பட்டது குறித்து பேசிய திரு புஷ், இதனுடைய பலனை இந்தியாவும் அமெரிக்காவும் இன்றிலிருந்து 50 ஆண்டுகளில் அனுபவிக்கும் என்றா.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்