ஊழல், ஊழல், ஊழல்!
"ஊழல் இல்லையேல் இந்தியா இல்லை; இந்தியா இல்லையேல் ஊழல் இல்லை" என்றொரு வெட்கக்கேடான நிலைக்கு இன்று இந்தியா தள்ளப்பட்டு விட்டது. அந்த அளவுக்குச் சுடுகாட்டு வெட்டியான் முதல், நாடாளுமன்றம், நீதிமன்றம், இராணுவம் என எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் என்ற நிலையை இந்திய அரசியல்வாதிகள் ஏற்படுத்தி விட்டனர். இவ்விஷயத்தில் மட்டும் ஆளும்கட்சி, எதிர்கட்சி, காமன்கட்சி என எவருக்கும் வித்தியாசமில்லை; வெட்கமுமில்லை.
கடந்த இரு வாரங்களாக இந்தியாவின் தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டு இருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. "ஏலம் விடுவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவின் தொலைதொடர்புத் துறைக்கு சுமார் 22,000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம்" என்றும் கூறியுள்ளது. இதில் ஏலத்தை வென்றவர்கள், தங்களது நிறுவனத்தின் பங்குகளைக் கொள்ளை இலாபத்திற்கு விற்றுவிட்டதாகவும் வெளிநாட்டு நிறுவனங்களும் இதனை வாங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.
பிரதமர், "புகாரில் உண்மை இல்லை" என்கிறார்; சம்பந்தப்பட்டத் துறையின் அமைச்சரோ புகாரையே மறுக்கிறார். பிறகு, "அதிகாரிகள் தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை" என எச்சரித்து அறிக்கை விடுகிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஒரு காலத்தில் இந்தியாவில் ஊழல் நடந்தது போய், ஊழலில் தான் இந்தியா உள்ளதோ என ஐயம் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொலைதொடர்புத் துறையின் அமைச்சர், "அனைத்து முடிவுகளும் பிரதமருடன் ஆலோசித்துதான் எடுக்கப்பட்டதாகவும், தொலைதொடர்பு ஆணையத்தின் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை" என்றும் கூறியுள்ளார். பிரதமரோ, "புகாரில் உண்மை இல்லை" என அமைச்சருக்குச் சப்பைக் கட்டு கட்டுகிறார். சென்ற ஆட்சியில் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த போது தான் அலைவரிசை ஊழல் வெளியாகி, பொது நல வழக்கும் தொடரப்பட்டு இன்றுவரை எந்த முடிவும் எட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், "கடந்த முறை பின்பற்றப்பட்ட விதிமுறைகள் தான் இம்முறையும் பின்பற்றப்பட்டுள்ளன" என அமைச்சர் வாய் கூசாமல் கூறுகிறார்.
இதற்கிடையே சிபிஐ, டில்லியில் தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்தைச் சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும், பதவி விலகிய தொலைதொடர்புத் துறை ஆணையத் தலைவரை விசாரித்ததாகவும் கூறியுள்ள நிலையில், தமிழகக் கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர், "புலனாய்வுத் துறை அதிகாரிகள் எவ்வாறு சோதனை செய்யலாம்?" என கேள்வி எழுப்பியிருக்கிறார். நாட்டை ஆள்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். கேள்வி கேட்டால் கூட்டணி தர்மம் குறித்துப் பேசுகிறார்கள்.
உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், இதனால் பாதிக்கப்படாத ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. "இந்தியாவின் பொருளாதாரமும், வங்கிச் சந்தையும் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதால் தான் இந்தியாவை இம்மாதிரியான பொருளாதார நெருக்கடிகள் பாதிக்கவில்லை" என பொருளியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். உலக நாடுகளோ, "அடுத்து இந்தியா தான் உலக பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும்" என நம்மை எதிர்நோக்கி இருக்க, நாமோ பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது வேதனைக்குரிய விஷயம்.
மக்களாகிய நாமும் லஞ்சத்தையும், ஊழல்களையும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொண்டு, அவன் இவ்வளவு அடித்து விட்டான்; இவன் இவ்வளவு அடித்து விட்டான் என்று வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கிறோமே ஒழிய புரையோடிப் போயுள்ள இந்த நோயை வேரறுக்க என்ன செய்கிறோம்?. இம்மாதிரியான ஊழல் பேர்வழிகளை முளையிலேயே கிள்ளி எறியும் வரை, இம்மாதிரியான ஊழல்களும், முறைகேடுகளும் தொடரத்தான் செய்யும். மக்களை குண்டு வைத்துக் கொல்வது மட்டும் தீவிரவாதச் செயல் அல்ல. நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து நாசமாக்கும் ஊழலும் தீவிரவாதம்தான். ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளும் தீவிரவாதிகள்தான்.
10 ரூபாய், 100 ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்ப்டுகிற அரசு அதிகாரிகள் எல்லாம், பாவப்பட்ட ஜென்மங்கள். அவர்களுக்குப் பிரதமரோ, கூட்டணிக் கட்சித் தலைவர்களோ வக்காலத்து வாங்கப் போவதில்லை. ஆனால் கஞ்சி போட்ட வேட்டி/சட்டையை கட்டிக் கொண்டு, கணக்கிலடங்கா செய்தியாளர்களுக்கு முன்னாள் பேட்டியளிக்கும் இந்த மாதிரி ஊழல் பேர்வழிகளை கடுமையான சட்டம் கொண்டு தண்டிக்க வேண்டும். இம்மாதிரியான பொருளாதார குற்றங்களுக்கு பொடா போன்ற கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும்.
இல்லையெனில் மக்களாட்சியின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும். மக்கள் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கத் தொடங்கிடுவர்.
"ஊழல் இல்லையேல் இந்தியா இல்லை; இந்தியா இல்லையேல் ஊழல் இல்லை" என்றொரு வெட்கக்கேடான நிலைக்கு இன்று இந்தியா தள்ளப்பட்டு விட்டது. அந்த அளவுக்குச் சுடுகாட்டு வெட்டியான் முதல், நாடாளுமன்றம், நீதிமன்றம், இராணுவம் என எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் என்ற நிலையை இந்திய அரசியல்வாதிகள் ஏற்படுத்தி விட்டனர். இவ்விஷயத்தில் மட்டும் ஆளும்கட்சி, எதிர்கட்சி, காமன்கட்சி என எவருக்கும் வித்தியாசமில்லை; வெட்கமுமில்லை.கடந்த இரு வாரங்களாக இந்தியாவின் தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டு இருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. "ஏலம் விடுவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவின் தொலைதொடர்புத் துறைக்கு சுமார் 22,000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம்" என்றும் கூறியுள்ளது. இதில் ஏலத்தை வென்றவர்கள், தங்களது நிறுவனத்தின் பங்குகளைக் கொள்ளை இலாபத்திற்கு விற்றுவிட்டதாகவும் வெளிநாட்டு நிறுவனங்களும் இதனை வாங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.
பிரதமர், "புகாரில் உண்மை இல்லை" என்கிறார்; சம்பந்தப்பட்டத் துறையின் அமைச்சரோ புகாரையே மறுக்கிறார். பிறகு, "அதிகாரிகள் தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை" என எச்சரித்து அறிக்கை விடுகிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஒரு காலத்தில் இந்தியாவில் ஊழல் நடந்தது போய், ஊழலில் தான் இந்தியா உள்ளதோ என ஐயம் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொலைதொடர்புத் துறையின் அமைச்சர், "அனைத்து முடிவுகளும் பிரதமருடன் ஆலோசித்துதான் எடுக்கப்பட்டதாகவும், தொலைதொடர்பு ஆணையத்தின் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை" என்றும் கூறியுள்ளார். பிரதமரோ, "புகாரில் உண்மை இல்லை" என அமைச்சருக்குச் சப்பைக் கட்டு கட்டுகிறார். சென்ற ஆட்சியில் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த போது தான் அலைவரிசை ஊழல் வெளியாகி, பொது நல வழக்கும் தொடரப்பட்டு இன்றுவரை எந்த முடிவும் எட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், "கடந்த முறை பின்பற்றப்பட்ட விதிமுறைகள் தான் இம்முறையும் பின்பற்றப்பட்டுள்ளன" என அமைச்சர் வாய் கூசாமல் கூறுகிறார்.
இதற்கிடையே சிபிஐ, டில்லியில் தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்தைச் சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும், பதவி விலகிய தொலைதொடர்புத் துறை ஆணையத் தலைவரை விசாரித்ததாகவும் கூறியுள்ள நிலையில், தமிழகக் கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர், "புலனாய்வுத் துறை அதிகாரிகள் எவ்வாறு சோதனை செய்யலாம்?" என கேள்வி எழுப்பியிருக்கிறார். நாட்டை ஆள்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். கேள்வி கேட்டால் கூட்டணி தர்மம் குறித்துப் பேசுகிறார்கள்.
உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், இதனால் பாதிக்கப்படாத ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. "இந்தியாவின் பொருளாதாரமும், வங்கிச் சந்தையும் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதால் தான் இந்தியாவை இம்மாதிரியான பொருளாதார நெருக்கடிகள் பாதிக்கவில்லை" என பொருளியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். உலக நாடுகளோ, "அடுத்து இந்தியா தான் உலக பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும்" என நம்மை எதிர்நோக்கி இருக்க, நாமோ பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது வேதனைக்குரிய விஷயம்.
மக்களாகிய நாமும் லஞ்சத்தையும், ஊழல்களையும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொண்டு, அவன் இவ்வளவு அடித்து விட்டான்; இவன் இவ்வளவு அடித்து விட்டான் என்று வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கிறோமே ஒழிய புரையோடிப் போயுள்ள இந்த நோயை வேரறுக்க என்ன செய்கிறோம்?. இம்மாதிரியான ஊழல் பேர்வழிகளை முளையிலேயே கிள்ளி எறியும் வரை, இம்மாதிரியான ஊழல்களும், முறைகேடுகளும் தொடரத்தான் செய்யும். மக்களை குண்டு வைத்துக் கொல்வது மட்டும் தீவிரவாதச் செயல் அல்ல. நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து நாசமாக்கும் ஊழலும் தீவிரவாதம்தான். ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளும் தீவிரவாதிகள்தான்.
10 ரூபாய், 100 ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்ப்டுகிற அரசு அதிகாரிகள் எல்லாம், பாவப்பட்ட ஜென்மங்கள். அவர்களுக்குப் பிரதமரோ, கூட்டணிக் கட்சித் தலைவர்களோ வக்காலத்து வாங்கப் போவதில்லை. ஆனால் கஞ்சி போட்ட வேட்டி/சட்டையை கட்டிக் கொண்டு, கணக்கிலடங்கா செய்தியாளர்களுக்கு முன்னாள் பேட்டியளிக்கும் இந்த மாதிரி ஊழல் பேர்வழிகளை கடுமையான சட்டம் கொண்டு தண்டிக்க வேண்டும். இம்மாதிரியான பொருளாதார குற்றங்களுக்கு பொடா போன்ற கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும்.
இல்லையெனில் மக்களாட்சியின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும். மக்கள் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கத் தொடங்கிடுவர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

எழுதியவர்: jinna, December 28, 2009
india matum alla all worldum pracanai kullahava valgirargal pracanayai tirka munaibavargal kannai mudi kondu arrivai adgu vaitu vitu inta manudatai malum malum ilivinpalum alivinpalum ilutu sallapaduhirarhal yano ivargal inda worldin perum pagudiyai 1400 varudam vali nadaty cendra INTELLECTUAL LEADER SHIP aha irunta IDEOLOGY ISLAM -tai myha vasadyaga marutum maraitumvarum mudalaigalin tyittam syrudu syrudga tolviyadindu varuhiradu aryvudaya makkal sydanai syvargal GAMBLING adypadil amaida mudalalytuvatin ECONOMIC SYSTEM worldya padyil eatry iruca same systatin adypadyil ammainda INDIAN ECONOMY MATUM nallairukudu endru solvadu american sapitu mendru tupina vatrillai yadutu suvitu o bas bas rumba nalla irukudu eanru solvadrkum vitasam illay meendum manida kulam manidanaga vala vectary adaya IDEOLOGY ISLAM MATUMA THIRVU think about it
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|