இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சுற்றுச் சூழலுக்கு அடுத்த அச்சுறுத்தல்: செல்போன் கழிவுகள்!

E-mail அச்செடுக்க
அதிவேக தொழல்நுட்ப வளர்ச்சி காரணமாக புதிய மொபைல்களை மாற்றுவது நமக்கு இனிப்பான விஷயம்தான். ஆனால், தூக்கி எறியப்படும் பழைய செல்போன்கள் எல்லாம் சேர்ந்து 8000 டன்கள் அளவுள்ள சுற்றுச் சூழலுக்கு கேடான குப்பையை 2012 ஆம் ஆண்டிற்குள் உருவாக்கப் போகிறது என்பது நிச்சயம் இனிப்பான விஷயமில்லை.

டிலோயட் எனும் சர்வதேச அமைப்பு தாக்கல் செய்துள்ள வெள்ளை அறிக்கையில், உலக சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கப்போகும் அதிகரித்துவரும் செல்போன் குப்பைகளை சரியான முறையில் கையாள்வது பற்றிய தேவை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

அதிவேகமாக மாறிவரும் தொழில் நுட்பம் மற்றும் புதிய மொபைல் மாடல்கள், இருக்கும் மொபைல்களை பழுது நீக்கி பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டாதது ஆகியவை புதிய செல்போன்களின் தேவையை அதிகரிக்கின்றன.

இந்த சிக்கலுக்கு முறையான மறுசுழற்சி, மீள் பயன்பாடு திட்டம் ஏதும் இல்லையென்றால், 8000 டன் செல்போன்  கழிவும் பூமியில் குழி தோண்டித்தான் புதைக்க வேண்டியிருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகள் சுற்றுச் சூழலுக்கும், உயிரினங்களுக்கும் மிகப்பெரும் கேடாக அமையும் என்று டிலோயட் கன்சல்டிங் இந்தியாவின் மானேஜிங் டைரக்டர் பராக் சைகோங்கர் கூறியுள்ளார்.

உபயோகிக்கப்பட்ட மொபைல் போன்கள் குழிகளிலோ அல்லது முறையற்ற முறையிலோ பூமியில் புதைக்கப்பட்டு, அதனால் நிலத்தடி நீரில் விஷப்பொருட்க்கள் கலப்பதில் இருந்து இந்தப் பிரச்சனையை துவங்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை வகையில் இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதால் நாம் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தக் கழிவுகளைக் கையாள கடுமையான சட்ட விதிகளை அரசு உருவாக்கவேண்டும் என்றும் சைகோங்கர் தெரிவித்தார்.

2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கிடையில் செல்போன் கழிவுகள் உலகளவில் சுமார் 9 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் அவற்றில் 80 சதவீதம் தீங்கானது எனவும் இவ்வறிக்கை கூறுகிறது.

பெருகிவரும் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக, மொபைல் கழிவுகளை குறைக்கப்படும் வகையிலும், பயன்படுத்திய போன்களை கட்டாய மறுசுழற்சிக்கு உட்படுத்தும் வகையிலும் விதிகளை அரசு அமைக்க வேண்டும் என்று சைகோங்கர் கூறுகிறார்.

தங்கள் மொபைல்களை அடிக்கடி மேம்படுத்திக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருப்பவர்களே செல்போன் கழிவுகளின் காரணகர்த்தாக்கள். ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள சுமார் 65 சதவிகிதத்தினர் தங்கள் மொபைல்களை இரண்டு வருடத்திற்கு ஒரு முறையேனும் மாற்றுகிறார்கள். அவ்வாறெனில், மறு சுழற்சி செய்யப்பட்டாலே தவிர ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும் சுமார் பத்து கோடி மொபைல்கள் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக வந்து சேருகின்றன. இந்த அவலத்தைத் தவிர்க்க மறுசுழற்சி மற்றும் மறுசரியாக்கலும் (Refurbishing) அவசியம் என்கிறது அந்த அறிக்கை.

பயன்படுத்தப்பட்ட போன்களின் வாழ்நாளை மறுசரியாக்கல் அதிகரிக்கின்றன; மறுசுழற்சி அந்தப் பொருளை உருவாக்கத் தேவைப்படும் பொருட்களின் தேவையை குறைக்கும். இந்த இரு விஷயங்கள் இருந்தால் செல்போனின் வாழ்நாள் பற்றிய பார்வையே மாறும். அதில் ஒவ்வொரு பயனாளரும் தங்களளவில் இந்த அச்சுறுத்தலை குறைப்பதற்கு உதவியாக இருப்பார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கருத்துக்கள் (2)Add Comment
0
...
எழுதியவர்: Abdul Bari, November 07, 2009
Ya allah! Shameem ku marumayil vetriyai tharuvayaga. athu ponra veerathi anaivarukkum tharuvayaga
0
...
எழுதியவர்: vivekjayan, March 17, 2010
ayyah ,

idhu sadharana vishayam ille, miga periya vishayam media kal idhayum

ellarukkum kondu sellunga, arasangam idhai pathi mukiyama nadavadikai edukanum, illenna pinnadi vara namba thalaimurai nambalai mannikkamattanga//

media idhai ellarukkum udanadiya theriyapaduthi cellphone thinamum pudusa vangaradha niruthanum, pazhasai repair panni use pannanum maximum,
adhoda labam sampadhikkara airtel , aircel, matra ella company kalum idhukku solution kandupidikanum, thayarikkara nokia sony ericson samsung madhiri ella company um meeting pottu makkalukku nallaidhai seyyattum,

adhu than makkaloda viruppam,,


கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்