பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இன்று காலை நடந்த தற்கொலை தாக்குதலில் சுமார் 30 பேர் வரை பலியாகியுள்ளனர். 100-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ராவல்பிண்டியில் உள்ள பிரபலமான சாலிமார் ப்ளாஸா அருகே இச்சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்த இடத்தின் அருகில் தான் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருப்பத்து குறிப்பிடத்தக்கது.
சென்ற வாரம் ரானுவ தலைமை அலுவலக தாக்குதலில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டனர், அதில் 6 ரானுவ வீரர்களும், 4 தீவிரவாதிகளும் அடங்கும். பாகிஸ்தானில் உள்ள பல்வேறு நகரங்களில் கடந்த இருமாதங்களாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துவருவது அண்டை நாடான இந்தியாவிற்கு கவலையளித்துள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




