இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சாதனை நாயகனை வாழ்த்துவோம்!

E-mail அச்செடுக்க
ஹைதரபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 17000 ரன்களை கடந்துள்ளார். உலக கிரிக்கெட் வரலாற்றில் எவரும் எளிதில் முறியடித்துவிட முடியாத சாதனையை செய்திருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடி வரும் சச்சினின் கிரிக்கெட் சாதனைகள் மெச்சத் தகுந்தது.

ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 436 போட்டிகளில் விளையாடி 45 சதங்கள், 91 அரைச் சதங்கள் என சாதனைகள் தொடர்கிறது. சாதனைகள் முறியடிப்பதற்குதான். எனினும் அச்சாதனைகள் முறியடிக்கப்படும் வரை அதை செய்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், டெஸ்ட் போட்டிகளில் 99.94% சராசரி ரன்களை சேர்த்திருக்கும் டான் பிராட்மேனுடன் நம் லிட்டில் மாஸ்டரை பலர் ஒப்பிடுவதுண்டு. ஆனால் பிராட்மேன் விளையாடிய காலம் வேறு; சச்சின் விளையாடும் காலம் வேறு. பிராட்மேன் விளையாடிய காலத்தில் தலைக் கவசம் கிடையாது. உடல் பாதுகாப்புக் கவசம் கிடையாது. பவுலிங்கில் ஜாம்பாவான்களாக விளங்கிய மேற்கிந்தி தீவுகளை எதிர்த்து விளையாடுவது என்பது வீரர்களின் அசாத்திய திறமை. அவருடன் ஒப்பீடு என்பது பிராட்மேனுக்கு செய்யப்ப்டும் அநீதி.

அதே சமயத்தில் டெண்டுல்கர் விளையாடி ரன் சேர்த்த அல்லது சாதனை புரிந்த போட்டிகளில் இந்தியாவின் வெற்றி என்ன என்பது ஆராயப்பட வேண்டியது. மேலும் இந்திய கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் சரியாக விளையாடாத சமயத்தில் கூட அவரால் அணியில் தொடர்ந்து நீடிக்க முடிந்தது.

அசாருதீன் தலைமையில் ஆட ஆரம்பித்த சச்சின் கங்குலி, ராகுல் திராவிட், கும்ப்ளே, தோனி என அனைத்து முன்னணி வீரர்களின் தலைமையில் விளையாடியுள்ளார், விளையாடி வருகிறார். ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் அதிக போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்ற சச்சின், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெறுவதற்கு இன்னும் 9 போட்டிகள் தான் உள்ளன. அதனையும் விளையாடிவிட்டால், கிரிக்கெட் விளையாட்டின் சாதனைப் பட்டியலில் சச்சினின் புகழ் பல நுற்றாண்டுகள் நிலைபெறலாம்.

லிட்டில் மாஸ்டர் என்றும் ரன் மெஷின் என்றும் அழைக்கப்படும் சச்சினின் விடாமுயற்சி இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. என்னதான் குறைகள் கூறப்பட்டாலும் சச்சினின் விடாமுயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை இளைஞர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டு. அவ்வகையில் சச்சினுக்கு இந்நேரம்.காம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது
கருத்துக்கள் (3)Add Comment
0
...
எழுதியவர்: S.MOHAMED THAMEEM, March 19, 2010
WHAT EVER YOU SAY, BUT I GIVE A LEAST RECOGNITION TO CRICKET AS A GOOD SPORT.
0
...
எழுதியவர்: karthi, June 16, 2011
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், டெஸ்ட் போட்டிகளில் 99.94% சராசரி ரன்களை சேர்த்திருக்கும் டான் பிராட்மேனுடன் நம் லிட்டில் மாஸ்டரை பலர் ஒப்பிடுவதுண்டு. ஆனால் பிராட்மேன் விளையாடிய காலம் வேறு; சச்சின் விளையாடும் காலம் வேறு. பிராட்மேன் விளையாடிய காலத்தில் தலைக் கவசம் கிடையாது. உடல் பாதுகாப்புக் கவசம் கிடையாது. பவுலிங்கில் ஜாம்பாவான்களாக விளங்கிய மேற்கிந்தி தீவுகளை எதிர்த்து விளையாடுவது என்பது வீரர்களின் அசாத்திய திறமை. அவருடன் ஒப்பீடு என்பது பிராட்மேனுக்கு செய்யப்ப்டும் அநீதி.
0
...
எழுதியவர்: karthi, June 16, 2011
ithu unmai

கருத்து எழுதுக

busy
 
நுனிப்புல்