
அதென்ன வணங்காமுடி? பெயரில் சற்று இறுமாப்பு தெரிகிறதே? - கார்த்திகேயன்
தலையில் தாங்கிய மகுடம் (தமிழ் முடி) வணங்காது; வளையாது என்பதே பொருள். இது இறுமாப்பு இல்லை கார்த்திகேயன்; தன்னம்பிக்கை.
இனி சுதந்திரப்போராட்டங்கள் எல்லாம் தீவிரவாதம்தானா? - கலீல் கிப்ரான்
தீவிர சுதந்திரப் போராட்டங்களாகலாம்.

பிரிண்டட் மீடியாவில் கிடைக்கும் வாசிப்பு அனுபவம் இணைய மீடியாவில் இல்லையே? - J.அப்துல் ரஹ்மான்
படுக்கையில் வாகாகச் சாய்ந்து கொண்டு மடித்துப் பிடித்தபடி வாசிக்கும் சுகம் இதில் இருக்காதுதானே?
கருணாநிதி தமிழ் நாட்டுக்கு கிடைச்ச மிகப் பெரிய சாபம்தானே? - சுரேஷ் குமார்
"வரங்களே
சாபங்களாகுமென்றால்
இங்கே தவங்கள்
எதற்காக"
என்றார் கருணாநிதியின் நண்பர் அப்துல் ரகுமான்.
வரமாய் வந்தது சாபமாய்த் தோன்றக் காரணம்
குடும்பப் பாசமும் சுய நலமும்தான்.
தலாய்லாமா பின்லாடன் ஒப்பிடுங்க பார்ப்போம் - சையது அபூதாஹிர்
தலாய்லாமா சீனாவுக்குப் பயந்து இந்தியா வந்தவர்; அவருக்கு அமெரிக்கா ஆதரவு.
பின்லாடன் சோவியத்துக்கு எதிராக ஆப்கன் சென்றவர்; அமெரிக்கா பயப்படுகிறது.
அரசியல் மற்றும் சினிமா சம்பந்தமான கேள்விகளை ஏன் தவிர்க்கின்றீர்கள்? - ராஜா
வணங்காமுடி விளம்பரத்தை மீண்டும் படியுங்கள் ராசா! சினிமா , ஆன்மீகம் என்ற இரண்டுக்கு மட்டுமே தடை.
சினிமா பொழுதுபோக்கு மட்டுமே, அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டாது.
ஆன்மீகம் அவரவர் நம்பிக்கை. வணங்காமுடிக்கும் அது உண்டு! ஆன்மீகத்தைத் திணிக்க முடியாது
இந்தியாவின் எதிர்காலத்திற்கு உங்கள் வழிகாட்டுதல் என்ன? - ப்ரியா
விரைவாக வளர்ந்துவரும் நம் இந்தியாவில் மதுகோடா போன்ற ஊழல் அரசியல்வாதிகளைக் களையெடுக்க, தன்னலமற்ற இளைஞர் பட்டாளம் தூய நோக்கோடு அரசியலுக்கு வரவேண்டும் என்பதே வணங்காமுடியின் வழிகாட்டல்.
திராவிடர் கழகத்திலும் வாரிசு அரசியல் வந்துவிட்டதே? - ஸ்ரீகுமார்
திராவிடர் கழகத்திலும் என்று "உம்"மை போட்டுக் கேட்கும் அளவுக்கு இப்போது அக்கழகம் இல்லை.வீரமணி என்று கருணாநிதி/ஜெயலலிதா என மாறிமாறித் "தட்ட"த் துவங்கினாரோ அதன் பிறகு அவர்களைப்போலவே செயல் படுவதில் என்ன வியப்பு?
"நானோ என் குடும்பமோ அரசுப் பதவிகளில் அமர மாட்டோம்" என்று மருத்துவர் ராமதாசு சொன்னாரே? பின் அன்புமணி மத்திய அமைச்சரானது எப்படி?
நீதிபதிகளின் சொத்து விபரங்களை வெளியிடுவதால் பொதுமக்களுக்கு என்ன லாபம் ? - இப்னு பஷீர்
நீதி விற்கப்படவில்லை என்ற நம்பிக்கையும் நீதிபதிகள் மீது நல்லெண்ணமும் ஏற்படும்.
பாஜகவிற்கு எதிர்காலம் உள்ளதா ? - பாலாஜி
கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்கள் போன்றோரை நம்பி ஆட்சி அமைக்க முயன்றால், எதிர்காலம்?
ராகுலுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கா? - பாலா
இளைஞர்களைக் கவரும் அவரது செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கின்றன.
தமிழ்நாட்டிற்கு வந்தும் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காமல் போன அவரது தன்னம்பிக்கையைப் பாராட்டுகிறேன்.

சச்சின் சாதனைகள் குறித்து வணங்காமுடியார் என்ன கூறுகிறார்? - செந்தில்
சச்சினின் இளவயதுச் சாதனையை முறியடித்த மும்பைச் சிறுவனை நினைத்துப் பார்க்கிறேன்.
பெரியாறு அணையில் தமிழக அரசின் செயல்பாடு? - அருணாச்சலம்
ஜெயலலிதா குறைகூறிக்கொண்டிருக்கும் அளவுக்கு இல்லை.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலைக்குச் செல்வதை இவ்வாண்டு தவிர்த்தால் பலன் கிடைக்குமா? - மகேசு
பலன் யாருக்கு? சபரிமலைக்கா முல்லைப் பெரியாறுக்கா?
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். |

| < முந்தையது | அடுத்தது > |
|---|




