சுமார் அறுபது சதவிகித நிலப் பரப்பினை கொண்டிருக்கும் அபிசல் சேற்று வெளிகள் உலகின் கார்பன் மறுசுழற்சிக்கு மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. இது போன்ற பெரும் கடல் படுகை வெளிகள் இரண்டினை நீண்ட நாள் ஆராய்ச்சி செய்த பிறகு பருவ நிலை மாற்றங்களால் அங்கு வாழும் உயிரினங்கள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு உள்ளன எனத் தெரிய வருவதாக தேசிய அறிவியல் அகாதெமியின் முன்னெடுப்புகள் (PNAS) தினசரி ஒன்று தெரிவித்துள்ளது. கடலினுள் 2000 மீட்டர்கள் ஆழத்தில் விரிந்துள்ள இந்த அபிசல் படுகைகளை ஒரு தனித்த வகைகளான, நிலையான சூழல் ஒருங்கிணைவாக உள்ளது என வரலாற்று ரீதியாக கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் கருதுகின்றனர். ஆனால் உலகின் பருவ நிலை மாற்றங்கள் கடலின் மிக ஆழமான, அமைதியான சுற்றுசூழலிலும் எதிர்பாராத மிகப்பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்திட முடியும் என்று மாண்டரே பே அகுவாரியம் ஆராய்ச்சி மையத்தின் சமுத்திர சுற்றுசூழல் ஆய்வாளரான கேன் ஸ்மித் தெரிவிக்கிறார். இவர் தேசிய அறிவியல் அகாதெமியின் முன்னெடுப்புகள் (PNAS) தினசரியின் சமீபத்திய கட்டுரையின் முக்கிய எழுத்தாளரும் கூட. இவரும் இவரின் உதவி ஆசிரியைகளும் இணைந்து நிகழ்த்திய 18 வருட நீண்ட ஆராய்ச்சியில் இது போன்ற சுற்றுச் சூழல் மாற்றங்கள் வாரங்கள், மாதங்கள் தோறுமோ அல்லது நீண்ட காலத்திற்கோ நடக்கின்றன என்று காட்டுவதாக சொல்கின்றனர்.
இந்த ஆய்வுகள் இரண்டு முறை முழுமையான தொடர் ஆய்வாக இரண்டு இடங்களில் நடத்தப்பட்டன. ஒன்று ஸ்டேஷன் எம் என்றழைக்கப்படும் கலிபோர்னியா கரையிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலில். இரண்டாவது இடம் - அயர்லாந்தில் இருந்து பல நூறு கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள போர்க்பைன் அபிசல் வெளிகள்.
இந்த சேற்று சமவெளி படுகைகள் கடலின் அடியில் சுமார் 4000 முதல் 5000 மீட்டர்கள் ஆழமுள்ளவை. இந்த குளிர்ந்த, இருண்ட சூழலில் கிட்டத்தட்ட உணவே கிடைக்காது. மேலே சூரிய ஒளி படும் இடத்திலிருந்து மெதுவாக கீழிறங்கி வரும் சிதைந்த கழிவுகளே அங்கிருக்கும் உணவுகள். இவ்வாறு இறங்கி வரும் கழிவுகள் திண்ணப்பட்டும், மீண்டும் கழிவாக்கப்பட்டும் அதன் சத்துக்கள் பெரும்பாலும் இல்லாமலாகி விடுகின்றன. மேலிருந்து வரும் கழிவுகளில் சுமார் ஐந்து சதம் மட்டுமே அபிசல் படுகைகளை அடைகின்றன என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவும் காலத்திற்கேற்றாற் போல் பெரும் மாற்றத்திற்குட்பட்டவை என்று ஸ்மித் மற்றும் அவரின் உப ஆய்வாளர்களின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. உணவு பங்கீட்டில் இந்த வித்தியாசங்கள் பல காரணங்களால் விளைகின்றன. மேற்பரப்பில் உள்ள ஆல்கேக்கள் சத்து துணுக்களை கடலடியில் அனுப்புகின்றன. இதல்லாமல், கடல் சார் விலங்குகளால் உண்ணப்படும் ஆல்கேக்களும் அதன் கழிவுகளை கடலடி நீரோட்டம் எவ்வாறு கடத்துகின்றன என்பதும் மற்ற காரணிகளாகும்.
இந்த ஆழ்கடல் உலகின் உணவுச் சங்கிலியை உலகில் நிகழும் பருவமாற்றங்கள் பாதிக்கும் என்று இதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆழ்கடல் உலகின் உணவுச் சங்கிலியை உலகில் நிகழும் பருவமாற்றங்கள் பாதிக்கும் என்று இதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




