
அழுகை சீக்கிரம் வந்துவிடும். சிரிப்பு சீக்கிரம் வருவதில்லை! விஞ்ஞான ரீதியாக விளக்க முடியுமா? - பிலால்
கண்ணீர் நம் உடலில் உருவாகும் இரசாயணங்களாலும் ஹார்மோன்களாலும் உருவாவது! நமக்கு மகிழ்ச்சியோ துன்பமோ, வலியோ ஏற்படும்போது நமது மூளையும் உடலும் இணைந்து செயல்பட்டு உருவாக்கும் இரசாயணமும் ஹார்மோனும் கண்ணீராக வெளிப்படுகின்றன.இதனால் உடனே அழுகை வருகிறது.
அழுகை நம் உடலில் இருக்கும் அதிகப்படியான இரசாயணம் வெளியேற உதவுவதால், அழுது முடித்தபின் துயர் தீர்ந்த நிம்மதி ஏற்படுகிறது.
துன்பத்தையோ வலியையோ தாங்கும் மன வலிமை பெற்றவர்களுக்கு அழுகை உடனே வருவதில்லை.
சிரிப்பு நகைச்சுவையாலோ , கிச்சுகிச்சு மூட்டுவதாலோ நைட்ரஸ் ஆக்ஸைடை சுவாசிப்பதலோ வரும்.
நகைச்சுவையக் கேட்டாலோ பார்த்தாலோ உடனே சிரிப்பு வருவதில்லையா உங்களுக்கு?
எனில் நிறைய இழந்து விட்டீர்கள் என்று பொருள்
இந்தியா வல்லரசாகி விட்டால் பாகிஸ்தான் என்னவாகும்? - ராம்
இந்தியா வல்லரசாகவில்லை என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.?
அமெரிக்கா, ரஷ்யா போன்று பெரும் வல்லரசாக இல்லையெனினும், துணைக்கண்டப் பகுதிகளில் இந்தியா வல்லரசுதான்.
அணுகுண்டு, அணு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் இராணுவத் தளவாடங்கள் போன்றவற்ரில் இந்தியா குறைந்ததில்லை.
அதனால்தான் பாகிஸ்தான் இந்தியாவில் தீவிரவாத ஆட்டம் போடுகிறது.அதனால் பாகிஸ்தான் என்னவாகும் என்ற கேள்விக்கே இடமில்லை.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசங்களும் ஒருவகையில் லஞ்சம்தானே? - அமுதா
"இல்லை! உற்சாகமூட்டல் அல்லது இல்லோர்க்கு உதவுதல்.
இலஞ்சம் என்பது, கொடுப்பவனுக்கு வாங்குபவன் சட்டத்தைமீறி உதவுவதற்கான விலை.
பள்ளி மாணவர் இலவசம் பெற்று எந்தச் சட்டத்தை மீறப்போகிறார்கள் அமுதா!
உங்கள் பெயரில் "அமுதசுரபி" இருந்ததாக "மணிமேகலை"க் காப்பியம் கூறுகிறது.
அமுதசுரபியால் அமுதூட்டப்பட்டவர்கள் எவருமே அதை இலஞ்சமாக எண்ணவில்லை.
கிரிக்கெட் ஆட்டங்களில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் போதும், வீரர்கள் ஆட்டமிழக்கும் போதும் அரைகுறை ஆடைகளுடன் சிலர் நடனமாடுவது யாரை உற்சாக படுத்த ? வீரர்களையா ? ரசிகர்களையா? நடுவர்களையா? - முத்து ராஜ்
எல்லா கிரிக்கெட் ஆட்டங்களிலும் இது நடப்பதில்லை.
ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே இது நடப்பதாக அறிகிறேன்.
சினிமா நட்சத்திரங்கள் ஐபிஎல் ஆட்டத்தை குத்தகை எடுத்ததால் இப்படி அரைகுறை ஆட்டம் போடுகிறார்களோ என்னவோ?
வணங்காமுடிக்கும் வணங்காமண் கப்பலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? - சியாமளா
இல்லை.
"கேப்டன் அலி" என்ற பெயருள்ள கப்பலில், ஐரோப்பியாவில் வாழும் தமிழர்கள் இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பியபோது, "வணன்காமன்" எனப் பெயர்சூட்டினார்கள். அவ்வளவே!
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். |
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




