இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கூகிள் குரோம் இயங்குதள முன்னோட்டம்!

E-mail அச்செடுக்க

கூகிள், மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயங்கு தளத்துக்கான நேரடி சவாலாக அறிவித்திருக்கும் குரோம் இயங்கு தளத்தினை நேற்று தனது அலுவலகங்களில் முன்னோட்டம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2010 முதல்பாதியில் இந்த இயங்குதளம் விலைகுறைவான மடிக்கணினிகளில் கிடைக்கும் என கூகிள் அறிவித்துள்ளது.

இந்த இயங்குதளம் திறமூலச் செயலிகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் கூகிள் தெரிவித்துள்ளது. பயனில் உள்ள இயங்குதளங்களை ஒப்பிட்டால் குரோம் இயங்குதளம் மின்னல் வேகத்தில் இயங்கும் என்று கூகிளின் வைஸ்-பிரெசிடெண்ட் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

தற்போதைய குரோம் இயங்குதள மாதிரி வடிவமைப்பு 7 நொடிகளில் உயிர்பெற்றுப் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதன் பெரும்பாலான டெஸ்க்டாப் செயலிகள் கூகிள் வழங்கிகளில் இருந்தே செயல்படும் என்று தெரிகிறது.


கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்