இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

புத்தளத்தில் மூன்று உயர் கல்வி நிலையங்கள் திறந்து வைப்பு

E-mail அச்செடுக்க
புத்தளத்தில் மூன்று உயர் கல்வி நிலையங்களின் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இவ் வைபவங்களில் பிரதம அதிதியாக கால்நடைவள அபிவிருத்தி பிரதி அமைச்சரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு இம்மூன்று உயர் கல்வி நிலையங்களையும் திறந்து வைத்தார்.

சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வளாகம், வயம்ப பல்கலைக்கழகத்தின் தமிழ் வளாகம் மற்றும் தனியான ஒருங்கிணைக்கப்பட்ட விஞ்ஞானக் கல்லூரி ஆகியவற்றை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

புத்தளத்தில் உயர் கல்வித் துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் எடுத்த முயற்சியின் பலனாக இந்த உயர் கல்வி நிலையங்கள் புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திறப்புவிழா திறப்பு விழா வைபவங்களில் உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால, மக்கள் தோட்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா, பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ன, வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மற்றும் திறந்த பல்கலைக்கழக மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்