பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட லிபரன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் ஊடகங்களில் வெளியானது குறித்து அதிர்ச்சியடைந்த நீதிபதி லிபரன், விசாரணை அறிக்கையை வெளியிடும் அளவு தான் தரம் தாழ்ந்தவன் அல்லன் என்று கூறியுள்ளார்.விசாரணை அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து நீதிபதி லிபரனின் வீட்டருகே குழுமியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய லிபரன், "அறிக்கை குறித்து நான் எதுவும் பேச மாட்டேன். அறிக்கை ஊடகங்களில் வெளியாகி உள்ளது என்றால், எந்த ஊடகத்தில் முதலில் வெளியானதோ அவர்களிடம் சென்று அறிக்கையை உங்களுக்குத் தந்தது யார்? என்று அவர்களிடமே கேட்டு கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்" என்று கோபமாகக் கூறினார்.
விசாரணை அறிக்கையின் குறிப்பிட்ட சில கருத்துகள் மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடப்பட்டுள்ளது என்று எதிர் கட்சிகள் கூறுகின்றனவே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எதிர் கட்சிகள் எதுவேண்டுமானாலும் கூறட்டும். ஆனால் இப்படிக் கேட்பதன் மூலம் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்று திருப்பிக் கேட்டார்.
"என்னுடைய நடத்தையின் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள். இங்கிருந்து சென்று விடுங்கள்" என்று செய்தியாளர்களை நோக்கி கோபமாகக் கூறினார்.
ஊடகங்கள் நெருங்கிவிடும் நபர் அல்ல நான் என்று கூறிய அவர், இது குறித்து உங்களுடன் பேச விரும்பவில்லை என்றும் கூறினார்.
விசாரணை அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் முன் அதனை ஊடகங்களுக்குக் கொடுக்கும் பண்பு தமக்கு இல்லை என்றும் நீதிபதி லிபரன் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




