தான் வயதானவன் என்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ஒரு ஊக்கியாக மட்டுமே செயல்படுவதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், இந்தியவின் மக்கள் தொகையை வயது அடிப்படையில் கணக்கிட்டால் நான் வயதானவன். எனக்கு தற்போது 39 வயதாகிறது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் 40 வயதிற்கும் குறைவானவர்கள் என்று கூறினார்.
இளைஞர் காங்கிரசை ராகுல் காந்தி பலப்படுத்தவில்லை. இளைஞர்கள் தாங்களாகவே இளைஞர் காங்கிரசை பலப்படுத்திக் கொண்டனர். நான் வெறும் ஊக்கியாக மட்டுமே உள்ளேன். நான் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இல்லை. இளைஞர் காங்கிரசில் நான் உறுப்பினர் கூட இல்லை. இளைஞர் காங்கிரசை வலுவான அமைப்பாக உருவாக்குவதே என்னுடைய வேலை என்றும் ராகுல் கூறினார்.
காங்கிரஸ் கட்சி இளைஞர்களின் குரலைக் கேட்கும் கட்சியாக மாறி வருகிறது என்று கூறிய ராகுல், மாணவர் காங்கிரசையும், இளைஞர் காங்கிரசையும் ஜனநாயக ரீதியிலான அமைப்பாக நான் முயன்று வருகிறேன் என்றும் கூறினார்.
இளைஞர்கள் தங்கள் தலைவர்களைத் தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும். தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, இவர்தான் இளைஞர் காங்கிரசின் தலைவராக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று இளைஞர்கள் கூற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றும் ராகுல் கூறினார்.
பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகத்திலிருந்து இளைஞர்கள் அதிகளவில் இளைஞர் காங்கிரசில் இணைவதாகவும், அவர்களின் பெற்றோர் முன்னர் காங்கிரஸ் இயக்கத்துடன் தொடர்பு இல்லாதவர்களாக இருந்தார்கள் என்றும் ராகுல் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




