இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மேற்கு வங்க பந்த் : பேருந்துகளுக்கு தீ வைப்பு!

E-mail அச்செடுக்க
மின் கட்டண உயர்வை எதிர்த்து மேற்கு வங்க மாநிலத்தில் மாநில பாரதீய ஜனதா கட்சி விடுத்த 12 மணி நேர முழு அடைப்பு வன்முறையாக மாறியது. பாஜக தொண்டர்கள் அரசுப் பேருந்துகளை தீ வைத்துக் கொளுத்தினர். தனியார் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

கொல்கத்தா நகரிலிருந்து விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தை வி.ஐ.பி. சாலையில் நிறுத்தி அதனைத் தீயிட்டுக் கொளுத்தினர். நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் கலவரக்காரர்களைத் தடியடி நடத்திக் கலைத்தனர்.

ஹவுரா திடல் அருகே மற்றொரு பேருந்தையும் பாஜக ஆதரவாளர்கள் தீ வைத்துக் கொளுத்தியதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான தனியார் வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

ஹவுரா பாலத்தின் மீது பழைய டயர்கள், கற்கள் போன்றவற்றை வைத்து அந்தப் பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல இயலாதவாறு தடைகளை ஏற்படுத்தினர்.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு இரயில்வேயில் உள்ள ஹவுரா மற்றும் சீல்டா ஆகிய பகுதிகளில் இரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்க்காரர்கள் இரயில் தண்டவாளங்களில் அமர்ந்து கொண்டு மறியல் செய்தனர். பல இடங்களில் மரங்களை வெட்டி தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர்.

வன்முறையைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் உள்ளிட்ட சுமார் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்