இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவு!

E-mail அச்செடுக்க
வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம். வி. பி) எடுத்த முடிவில் எவ்வித மாற்றங்களும் இல்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண ஆட்சி மற்றும் அவிவிருத்திக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ள நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாண மக்கள் வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிப்பார்கள் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் சிவநேசதுறை (பிள்ளையான்) உள்ளிட்ட அக்கட்சியின் அரசியல் துறையினரின் நிலைப்பாடும் இதுவே எனத் தெரிவித்துள்ள அக்கட்சி அடுத்த நில தினங்களில் தமது நிலைப்பாட்டை ஊடகங்களுக்குத் தெரிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்