கொழும்பு- மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவங்க அமரசிங்க தனது வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார். ஆறு நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அவர் இன்று காலை கட்டுநாயகா விமான நிலையத்தை வந்தடைந்தார். நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வசிப்பதற்கு ஒரு நல்ல நாட்டைத் தேடியே தான் வெளிநாடு சென்றதாகக் குறிப்பிட்ட அவர், மஹிந்த ராஜபக்ஷ செல்ல நினைத்திருந்த நாடுகளுக்கு அவரால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் எனவும் குறிப்பிட்டார். நடைபெறப் போகும் தேர்தலில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்நாட்டுக்குக் கிடைக்காமல் போன ஜி.எஸ்.பி பிளஸ் ஆடைக் கோட்டா மீண்டும் நாட்டுக்குக் கிடைக்கும் என்றும், இந்நாட்டு அரச தலைவர்கள் சிங்களத்தில் ஒன்றும் ஆங்கிலத்தில் வேறொன்றுமாகக் கருத்துக்களைக் கூறியதன் விளைவாகவே இலங்கைக்கு இந்தக் கொட்டா கிடைக்காது போனதாகவும் அவர் கூறினார்.
இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்வீடன், ஜெர்மனி, மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் சென்ற சோமவங்க அமரசிங்க, அங்குள்ள கட்சியின் உறுப்பினாகள் மற்றும் இலங்கையர்கள் உட்பட அந்நாடுகளின் தலைவாகளையும் சந்தித்து கலந்துரையாடவும், மக்கள் விடுதலை முன்னணியின் வெளிநாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவங்களில் கலந்து கொள்ளவுமே தான் ஐரோப்பிய நாடுகளக்கான பயணத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




