இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

எமக்கு எதிரான பொய்ப்பிரசாரங்களை மக்கள் ஏற்க தயாராய் இல்லை - ஜனாதிபதி மஹிந்த

E-mail அச்செடுக்க
எதிர்கட்சிகள் தற்போது எனக்கு எதிராக பொய்ப்பிரசாரங்களையும், எனக்கு சேறு பூசும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்த பொய்ப்பிரசாரங்கள் மற்றும் சேறு பூசும் விடயங்களை நம்பி ஏமாந்துவிடாது யதார்த்தத்தைப் புரிந்து நடப்பவற்றை சிநிதித்துப் பார்க்குமாறு நான் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சருவதேச வலது குறைந்தோர் தினத்தையொட்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறினார். எதிர்கட்சி தற்போது என்னையும் எனது சகோதரர்களையும் இலக்கு வைத்து பல்வேறு பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்திக் கொண்டுள்ளனர். எமக்கு எதிரதாக பல்வேறு சேறு பூசும் நடவடிக்கைகளும் அரங்கெறிவருகின்றது. எமக்கு எதிராக உண்மையான குற்றச்சாட்டக்கள் எதுவும் இல்லாத காரணத்தினாலேயே எதிர்கட்சி இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றது. எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. மக்களின் நம்பிக்கை உள்ளது. என் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலை வரும்போது நான் பதவியிலிருந்து செல்வேன். எனினும் மக்கள் என்னுடன் உள்ளனர். நாட்டுக்காக நாம் எமது பணியை சரியாகச் செய்தோம். இந்நிலையில் எமக்கு எதிராக பலவாறான கதைகள் வரலாம். இவ்வாறான பொய்க்கதைகளுடன் அல்ல நிஜத்துடன் நீங்கள் இருங்கள். இந்நாட்டுக்கு எம்மால் ஆக வேண்டியதை சரியான முறையில்  குறைவின்றி நாம் செய்வோம் என்றார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்