இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டிச.6 ஊர்வலம் - காவல்துறை அனுமதி

E-mail அச்செடுக்க
muslim_processionடிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று சென்னையில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த பல்வேறு முஸ்லிம் அமைப்புகளுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுபற்றி சென்னை நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் செய்திக்குறிப்பு:

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு 17ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை நகரில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம், பேரணி, ஊர்வலம், மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் காலை 10 மணிக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் அருகில் இஸ்லாமிய ஜனநாயக கட்சி சார்பிலும், மாலை 3 மணியளவில் அதே ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்திந்திய இமாம் பேரவை சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பகல் 12 மணிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை அந்த அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த உள்ளனர்.

மாலை 4 மணியளவில் தமிழ்நாடு தவுஹித் ஜமாத் சார்பில் மன்றோ சிலை அருகில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே மாலை 4 மணியளவில் மெமோரியல் அரங்கம் அருகில் சுன்னத் ஜமாத் அமைப்பு சார்பில் மனித சங்கிலியும் நடத்த உள்ளனர்.

காவல்துறை அனுமதி இல்லாமல் யாராவது போராட்டங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.A
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்