இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சேலம் உருக்காலை விரிவாக்கம்!

E-mail அச்செடுக்க
சேலத்தில் உள்ள உருக்காலை நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு உருக்காலைகளை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் பணிகளை இந்திய இரும்பு எஃகு நிறுவனம் (செயில்) மேற்கொண்டுள்ளதாக மத்திய எஃகு துறை இணை அமைச்சர் சாய்பிரதாப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக் கிழமைனயன்று உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் எழுத்துப் பூர்வமாக அளித்த பதில் வருமாறு :

இந்திய இரும்பு, எஃகு நிறுவனம் சத்தீஸ்கரில் உள்ள பிலாய் உருக்காலை, ஜார்க்கண்டில் உள்ள போகாரோ உருக்காலை, ஒரிசாவில் உள்ள ரூர்கேலா உருக்காலை, மேற்கு வங்கத்தில் உள்ள துர்காபூர் உருக்காலை மற்றும் இஸ்கோ உருக்காலை மற்றும் தமிழகத்தில் உள்ள சேலம் உருக்காலை ஆகியவற்றை நவீனமயமாக்கும் மற்றும் விரிவாக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

நடப்பு கட்டத்தில் 13.82 மில்லியன் டன்னாக உள்ள எஃகு கையாளும் திறனை 23.46 மில்லியன் டன்னாக உயர்த்த செயில் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் உருக்காலை திரவ எஃகு உற்பத்தி திறனை 3 மில்லியன் டன்னிலிருந்து 6.3 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் வகையில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் சாய்பிரதாப் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்