தமிழகத்தில் வரும் 2011ம் ஆண்டு முதல் மின் பற்றாக்குறை இருக்காது என, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
வடசென்னை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 2வது பிரிவு அனல்மின் நிலையப் பணிகளை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பார்வையிட்டார். அப்போது, அவர் கூறியதாவது: 'வடசென்னையில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் அறிவிக்கப்பட்டு, அந்த பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இந்த அனல் மின்நிலைய பிரிவில் மின் உற்பத்தி துவங்கும்.
மேலும் வள்ளூரில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்திலிருந்தும் 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் அந்த ஆண்டில் தமிழகத்திற்கு 1,700 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும். வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் மின்பற்றாக்குறை இருக்காது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




