இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அரசியலில் கட்சித்தாவல்கள் அரங்கேறும் கட்டம் ஆரம்பம்.

E-mail அச்செடுக்க
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்கு வழமை போல கட்சி மாறல்கள் இடம்பெறவுள்ளதாக நம்பகமாகத் தெரியவருகின்றது. இதில் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கு அரசுடன் இணையவுள்ளதுடன், அரச தரப்பிலிருந்தும் பலர் விலகி ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர்.
 
ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அரசுடன் இணைய தீர்மாணித்துள்ளார். அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் உயர்குழுக் கூட்டத்தின் போது பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்த ஜொன்ஸ்டன் அதன் காரணமாக கட்சியுடன் முரண்பட்டுக் கொண்டார். அத்துடன் மற்றுமொரு குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசுடன் இணைவுள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் தென் பகுதி உறுப்பினர் ஒருவரும் அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
 
இதேவேளை அரச தரப்பிலிருந்தும் பல பிரமுகர்கள் எதிர்கட்சிக்கு மாற உள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஏற்கனவே அரசுடன் இணைந்து கொண்டுள்ள இரண்டு அமைச்சர்களும் மற்றும் இரண்டு அமைச்சர்களும் எதிர்த்தரப்பில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து உறுதியாகத் தெரிகிறது. அடுத்த வாரங்களில் இக்கட்சித் தாவல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
அடுத்த வாரம் அரசுக்கு பெரும் அதிர்ச்சி தரும் வாரமாகவே அமையும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலதளர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த வாரம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்