இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மே.இ.தீவு - ஆஸ்திரேலியா டிரா

E-mail அச்செடுக்க

அடிலெய்டில் நடைபெற்று வந்த மேற்கு இந்திய தீவு மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

 

இன்று இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய மேற்கு இந்திய தீவு 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் கெயில் 165 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் வெற்றி இலக்கு 330 ரன்களை எட்டி விடலாம் என்ற ஆஸ்திரேலியாவுக்கு பிரேவோ பிரேக் போட்டார்.

பிரேவோ 3 விக்கெட்களை சரிக்க 139 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தோல்வியின் வாசலில் நின்ற ஆஸ்திரேலியாவை கிளார்க்கும் ஹாடினும் பாதுகாத்தனர். ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

கெய்ல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்